“படைத்தவனே, எந்தத் தாய்க்கும் தந்தைக்கும் இந்த நிலை வரக்கூடாது..! "


‘எதற்காக எங்கள் மகனை இப்படிக் கொல்லாமல் கொல்கிறார்கள்? அவன் குற்றவாளிதான் என்றால் தாராளமாகத் தண்டியுங்கள். ஆனால் குற்றம் நிரூபணமாகும் வரை ஜாமீன்கூட மறுக்கப்படுவது காட்டு நீதியல்லவா?’

 இப்படிக் கேட்பவர்கள் அப்துந் நாஸர் மஅதனியின் தந்தை டி.எ. அப்துஸ்ஸமத் மாஸ்டரும் அவருடைய மனைவி அஸ்மாபீவியும்தான்.

MTV முதல் மக்கா வரை - கிறிஸ்டியான பேக்கர்


இசையிலேயே எப்பொழுதும் மூழ்கிக் கொண்டிருந்த கிறிஸ்டியான பேக்கர் 1990 களில் ஐரோப்பாவின் நம்பர் ஒன் சேனலில் தொகுப்பாளராக இருந்தார். வெகு விரைவிலேயே நேயர்களின் விருப்பத்திற்கு உரியவராகவும் இருந்தார். 1965 டிசம்பர் 13ம் தேதி ஜெர்மனியின் ஹம்பர்கரில் பிறந்த கிரிஸ்டியானா, ஐரோப்பாவின் பிரசித்திப் பெற்ற MTV யின் தொகுப்பாளராக 1996 வரை பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். ஒரு முறை கோல்டன் கேமரா அவார்டும் இரண்டு முறை கோல்டன் ஓல்ட் அவார்டும் பெற்றிருந்தார்.

தமிழ் சினிமாவும்; சில துப்பாக்கிகளும்!


வைத்தியம் தெரியாதவன் கையில் கத்தியை கொடுத்து, ஆபரேஷன் தியேட்டருக்கே அனுப்பியும் வைத்த கதையாக இருக்கிறது தமிழ் சினிமாவின் இன்றைய கதி.சமீபத்திய உதாரணம், துப்பாக்கி.

அதிகாலை ஆண்கள் : - மௌலவி நூஹ் மஹ்ளரி

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.
வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.

அபுதாஹிரை சிகிச்சைக்காக பரோலில் விடுவிக்க தமிழக அரசு மறுப்பது ஏன்? என எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கேள்வி

மிகவும் கவலைக்கிடமான உடல் நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக் கும் ஆயுள் சிறைவாசி அபுதாஹிரை சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட பின்னரும், சிகிச்சைக்காக பரோலில் விடுவிக்க தமிழக அரசு மறுப்பது ஏன்? என எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

யார் தேச துரோகி? எது தேச துரோகம்! மௌலானா ஆரிப் அலி அவர்களின் எழுச்சி உரை :

கேரளா ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் மௌலானா ஆரிப் அலி அவர்கள் 24-11-2012 அன்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றுகையில்  எனக்குத் தமிழ் தெரியாது, எனவே தமிழின் சகோதரி மொழியான மலையாளத்தில் பேசுகிறேன்! இன்று நாங்கள் நோன்பு வைத்திருக்கின்றோம். ஆஷுரா நோன்பு! கதிரவன் உதிப்பதர்க்குமுன் உணவு உண்ட நாங்கள் இதோ கதிரவன் மறையும் நேரத்தில் உணவு உண்டு நோன்பு துறக்கும் அருமையான நேரத்தில் நாங்கள் உங்களோடு இருக்கின்றோம்!

கோவையில் ஒற்றுமையின் ஒன்று கூடல் :

கோவையில் கடந்த சில நாட்களாக பதட்டம் நிலவியது. மாவட்ட ஆட்சித்தலைவர் கருணகரன் அவர்கள் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு குறித்த அமைதிக்குழு கூட்டத்தை கூட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுயிட்டார், அனைத்து இஸ்லாமிய இயக்க அமைப்புகளுடன் (15-11-2012) வியாழன் மாலை3 மணியளவில் ஆட்சிமன்ற கூடத்தில் நடைபெற்றது.

யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.

‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.

தீபாவளி :காசு கரியாகுது..! காற்று மாசாகுது..!



தீபாவளி நெருங்கிவிட்டது. மாற்று மத அன்பர்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு இணையாக சத்திய இஸ்லாத்திற்கு சான்றாய் விளங்கும் முஸ்லிம் சமுதாயமும் பட்டாசுகளை வெடிக்கிறது என்பது வருத்தமளிக்கிறது.


விஸ்வரூபம் திரைப்படம்: தமுமுக கோரிக்கை

விஸ்வரூபம் திரைப்படம்: 
முதலில் எங்களுக்கு காண்பிக்கப்படவேண்டும்-தமுமுக கோரிக்கை


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் அறிக்கை:

பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார்.

ஹஜ்ஜின் மகத்துவம்...!!! மக்காவில் தெருகூட்டும் தொழிலாளி கோடிஸ்வரனான கதை..!!

பங்களாதேசை சேர்ந்த ஒருவர் மக்காவின் தெருவை கூட்டி சுத்தம் செய்துவரும் பல்தியாவின் கூலி வேலையை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அவ்வாறு ரோட்டில் நின்று சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ள முதியவர் ஒருவர், திடீரெண்டு தன்னை கட்டி ஆரத்தழுவி தன்னை மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டு அழுததை கண்ட அந்த கூலித் தொழிலாளி அதிர்ந்தேவிட்டார்...! ஆம். அதற்கான காரணம் அந்த முதியவர் வேறு யாரும் அல்ல..! தன் உடன் பிறந்த சகோதரர்தான் அந்த முதியவர்.

நபி விமர்சனத்துக்குப் பதில் சொல்லும் குறும்படம்!

போராட்டத்தின் புதிய முகம்

முகமது நபியை இழிவுபடுத்தி வெளியான 'இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகெங்கும் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களும் போராட்டங்களை நடத்தினார்கள். இந்தப் போராட்ட வழிமுறைக்கு மாற்றாக... ஜமாதியே இஸ்லாமி ஹிந்த் அமைப்பானது, முகமது நபியின் வாழ்வியல் குறித்து ஓர் பிரசார இயக்கத்தை நடத்தி வருகிறது.

மனம் கனக்கும் அந்த மரணம்..! -


தாஃவத் உருது வாரமிருறை பத்திரிகையின் 'செய்தி கண்ணோட்டம்' - என்ற தலைப்பில் வெளியான 'நேரடி மொழிபெயர்ப்பு - 'அந்த மரணம் குறித்த வருத்தம் ஏன்?' என்பதை முழு தலையங்கத்தையும் உள்வாங்கி படிக்கும் போது மறைந்த முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சனன் ஜீ யின் மரணம் படிபபோர் எல்லோரையும் உண்மையில் மனம் கனக்க வைக்கும். 

சென்னையில் குறும்படம் வெளியீடு :


இறுதி தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வினை அறிமுகப்படுத்தும் ஒரு துளிக்கடல் குறும்படத்தின் வெளியீடு சகோதரர் அப்துல் காதர் அவர்கள் இறைவசனம் ஓத நிகழ்ச்சி ஆரம்பமானது.

“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக :

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதிலிருந்தும் ஹாஜிகள் மக்கா, நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர்.

இதோ இன்னும் சில தினங்களில்

லப்பைக்..... அல்லாஹும்ம லப்பைக்..
லப்பைக்.......லாஷரீகலக லப்பைக் .....
இன்னல் ஹம்த, வன்னி'மத, லகவல் முல்க் ......
லா ஷரீகலக்..

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகள் :

"(...ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்" (அல்குர்ஆன் 2:197).

அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதங்களில் ஒன்றாகிய 'துல்ஹஜ்' எனும் இந்த ஆண்டுக்கான இறுதி மாதத்தைப் பெற்றுள்ளோம், அல்ஹம்து லில்லாஹ்!

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்:

தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு[1].

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்த அமெரிக்கர் திடீர் கைது


லாஸ் ஏஞ்செலஸ்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்து அதை யூடியூபில் வெளியிட்ட அமெரிக்கரான நகோலா பேசலி நகோலாவை அமெரிக்க போலீஸார் இத்தனை நாட்கள் விட்டு விட்டு இப்போது திடீரென கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது நகோலா இயக்கிய இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்படம். இதில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்திருந்தார் நகோலா.

540 கோடி மக்களுக்கு நபியவர்களை அழகாக அறிமுகப்படுத்தகூடிய அரிய சந்தர்ப்பம்..!


கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு – 07 ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகாஹ் (திருமண பதிவு) நிகழ்வின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதி தலைவரும் பேருவளை ஜாமீயா நளீமியா கலாபீடத்தின் பிரதி பணிப்பாளருமான அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) ஆற்றிய நிகாஹ் பயானின் சுருக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

ரமழானை முடித்துவிட்டோம் இனி எங்கே?

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை ரமழான்கள் வந்துவிட்டுப் போவது பருவகாலக் கடமைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்காகவல்ல. தனது உள், வெளி வாழ்க்கையை இஸ்லாத்தினால் அழகுபடுத்தி வாழ நினைப்பவர்களுக்கு மேலும் உற்சாகத்தையும், ஊட்டச்சத்தையும் பயிற்சிகளையும் வழங்குவதற்காகவே.

 ரமழான் வருகின்றபோதுஅவசர அவசரமாகப் பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் தயார் செய்யப்படுகின்றன.

கண்ணியமிக்க லைலத்துல்கத்ர் இரவு :

லைலதுல் கத்ர்
இந்த ரமளான் மாதத்தில் அருட்கொடையாக திருக்குர்ஆன் இறக்கப்பட்ட லைலத்துல்கத்ர் எனும் பரக்கத் நிறைந்த இரவை அல்லாஹ் பொக்கிஷமாக கொடுத்திருக்கிறான்.ஆயிரம் மாதங்களை விட இந்த ஒரு இரவு சிறப்பு மிக்கதாக அல்லாஹ் தன் திருமறையில் அறிவிக்கின்றான்.

திருக்குர்ஆன் ஓத நேரமில்லை..! :

புனிதமிக்க ரமலான் மாதம் ஒவ்வொன்றாக நம்மை விட்டு சென்றுகொண்டிருக்கிறது, இனியும் சில நாட்கள் மட்டுமே நமக்காக உள்ளது, அனால் நம்மில் பலர் நோன்பை நோற்பவராக இருந்தாலும் திருக்குர்ஆனுடன்  தொடர்பு மிக மிக குறைவாகவே உள்ளது. நேரமில்லை என்ற காரணமும், சரியாக ஓதத் தெரியாது என்ற ஒரு மனநிலையும் நம்மில் பலபேருக்கு உள்ளது.


எங்கே மீடியாக்கள்...?


படப்பிடிப்பின் போது பிரபல நடிகைக்கு கால் சுளுக்கு....
நாட்டின் ஜனாதிபதி, குடும்பத்துடன் கோவா பயணம்...
ஏழு ஆண்டுகளாக காவல் துறைக்கு உழைத்த நாய் மரணம்...
மழை வேண்டி கழுதையை மனம் முடித்த வாலிபர்...
அழகிப் போட்டிக்கு பங்கு பெற முடியாத நடிகை கதறல்...
இன்னும்... இன்னும்...
சொல்லிக் கொண்டே போகலாம்
இன்றைய சூடான செய்திகள்.

நோன்பா...? பட்டிணியா...?


- அபு ஷம்ஷீர்
 

எதையும் 
உண்ணாமல் இருப்பது 
மட்டும் நோன்பல்ல...

கண்டதையும் 
எண்ணாமல் இருப்பதே 
நோன்பு...

கடை வீதிகளில் கழியும் கண்ணியமிகு ரமளான்..!

ஹாஜியா S.சான் பேகம்
ஒன்றுக்கு அடுத்தது இரண்டு. இரண்டுக்கு அடுத்தது மூன்று. இது யாருக்குத்தான் தெரியாது.

இது எல்லோருக்கும் தெரியும் என்றால், ரஜப் அடுத்தது ஷஅபான், அடுத்தது ரமளான். இதுவும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதானே. இங்கே மட்டும் தெரியாதது போல ஏன் நடந்து கொள்கிறீர்கள். புரியவில்லையே?

சென்னை மக்காஹ் மஸ்ஜிதில் நடந்தது என்ன? (வீடியோ)


சென்னை மக்காஹ் மஸ்ஜிதில் கடந்த வாரம் ( 06.07.2012 )  ஜும்மா மேடையில் முஸ்லி  யார்? என்ற தலைப்பில் மக்கா மஸ்ஜித் தலைமை இமாம்  மௌலவி சம்சுதீன் காசிமி அவர்கள் உரை நிகழ்த்தியுள்ளார், அந்த ஜுமுஆவில் முஸ்லிம் சமூகத்தில் தலைவிரித்தாடும் அனாசாரங்கள், புதுமைகள், ஷிர்க், பித்அத்   பற்றி  ஆதாரபூர்வமான ஹதிஸ்களுடன் வரலாற்று ஆதாரங்களுடன் எடுத்துக்கூறினார்.

சென்னையில் குட்வேர்ட் பப்ளிக் ஸ்கூல் துவக்க விழா

சென்னை செங்குன்றம் கோணிமேட்டில் குட்வேர்ட் பப்ளிக் ஸ்கூல் துவக்க விழா 17.06.2012 அன்று காலை நடைபெற்றது. முதஸ்ஸிர் அவர்களின் கிராஅத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனுடைய தமிழாக்கத்தை சிராஜுல் ஹசன் அவர்கள் வாசித்தார்.

கல்வி – ஒழுக்கம் – உயர்வு (Education – Ethics – Excellence) என்ற இலக்குடன் இப்பள்ளி துவங்கப்பட்டுள்ளது.

காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர்:

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் மத்தியில் குழப்பம் விளைவிக்க காதியானி வகைறாக்கள் முயற்சி செய்கிறார்கள். அண்மைக் காலமாக சென்னை, மேலப்பாளையத்தை அடுத்து தற்போது கோவையில் இந்த தீக்குறும்பர்களின் திருகுதாளச் செயல்பாடுகள் இலேசாகத் தலைகாட்டத் தொடங்கியுள்ளன.

ஜூஸ் பாக்கெட்டுக்குள் பாம்பு குட்டி:


கர்நாடக மாநிலம் உத்தர்கன்னடா பகுதியைச் சேர்ந்தவர் செய்யது முகம்மது சப்வான். இவர் அருகில் உள்ள பேக்கரியில் இருந்து பிரபல கம்பெனி தயாரிப்பான மாம்பழ ஜூஸ் பாக்கெட்டுகளை வாங்கி வந்தார். அதில் ஒரு பாக்கெட்டை எடுத்து அவரது மகள் சாஹிபா (22), சிறிய துளை வழியாக ஸ்டிரா மூலம் உறிஞ்சி குடித்தாள்.

குறைப்பிரசவ குழந்தைகள்:


ஐக்கிய நாடுகள் சபையின் 40க்கும் மேலான அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து, குறைப் பிரசவக் குழந்தைகள் குறித்து உலக அளவில் அறிக்கை ஒன்றினைத் தயாரித்துள்ளன. அதில் இந்தியா முன்னணியில் இருப்பதாக அதிர்ச்சி செய்தி ஒன்றினை அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. குறைப்பிரசவக் குழந்தைகள் பற்றி கணக்கெடுக்கப்பட்ட 199 நாடுகளில் இந்தியா 36வது இடத்தில் இருக்கிறது.

சமுதாயத்தலைவர்களின் ஒன்றுகூடலுடன் உதயமானது மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி

கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமியின் சார்பில் குல்லியத்துல் ஹிதாயா மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி இனிதே உதயமானது,
கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத், மற்றும் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு நிர்வாகிகள், உலமாக்கள், நகர முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில்,

காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காளான், பேல் பூரி, பானி பூரி விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் முளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் ரூ. 10 என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் மொய்க்கிறது. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும் விரும்பி காளான் உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் தினமும் 2 ஆயிரம் கருக்கொலை :


இந்தியாவில் தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிக்கப்படுவதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் சிசு கொலைக்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கோபம் மனிதன் தவிர்க்க வேண்டிய செயல்- (Video)

பேஸ்புக்கில் நட்பு..

வேலூர்: பேஸ்புக் மூலம் இரு பெண்களுடன் பழகி அவர்களை பலமுறை லாட்ஜுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உல்லாச நிலையில் இருந்ததை படம் எடுத்து வைத்து மிரட்டியே பலமுறை அந்தப் பெண்களை இந்த வாலிபர்கள் அனுபவித்துள்ளனர்.

வேலூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி. முருகேசனிடம் சென்னை திருவல்லிக்கேணி உலகப்பன் தெருவை சேர்ந்த சுஜித்ரா என்ற பெண் கொடுத்த புகாரில்,

கல்வி- ஏற்றமும், ஏமாற்றமும்!


பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள 9 மாணவ, மாணவியரும் நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிகளில் பயின்றவர்கள். இது நாமக்கல் மாவட்டத்துக்கு நிச்சயமாகப் பெருமை சேர்க்கும்.
இந்த வெற்றிக்காக அந்தக் கல்வி நிறுவனங்களின் உழைப்பு கொஞ்சமல்ல என்பதும், இதற்காக சிறந்த ஆசிரியர்களை அமர்த்தி, கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை

அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி!

சூசன் பஷீர்!

இதுதான் இந்தப் பேறு பெற்ற பெண்மணியின் பெயர். அண்மையில் அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரை வியப்பில் ஆழ்த்திய முஸ்லிம் பெண் இவர்! இவருக்கு என்ன நிகழ்ந்தது? இஸ்லாத்தைத் தழுவும் அமெரிக்கப் பெண்மணிகள் அனைவருக்கும் நிகழ்ந்துவரும் சோதனைகள்தாம் இவருக்கும் நிகழ்ந்தன.

இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்:


இலங்கை தம்புள்ள எனும் இடத்தில் உள்ள 67 ஆண்டுகால பாரம்பரியமிக்க பள்ளிவாசலை சேதப்படுத்தி முற்றிலுமாக தகர்க்க முயலும் சிங்கள புத்த குருமார்களின் செயலைக் கண்டித்தும், அதற்கு துணைபோகும் இனவெறி ராஜபக்ஷே அரசைக் கண்டித்தும் தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தலைமையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு -


கான்பெர்ரா:கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, (ஆஸ்திரேலியா குடும்பத்தினருக்கு) 83 லட்சம் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க ஃபாஸ்ட்புட் உலகின் புகழ்பெற்ற கெண்டகி ஃப்ரைட் சிக்கனுக்கு(கே.எஃப்.சி) நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில்அழகிய கடன் IAS அகாடமி: ஊக்குவிப்பு முகாம்

அழகிய கடன் IAS அகாடமி
நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உள்பட அனைத்துத் துறைகளிலும் பின் தங்கிய நிலையில் உள்ளது. இதனை மாற்றி முஸ்லிம் சமுதாயம் கல்வி, பொருளாதாரம் மற்றும் கண்ணியத்தில் மேம்படவும் இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்துத் துறைகளையும் இயக்கும் உயர் பதவி தான் IAS.

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் பேரணி

சென்னை: முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அப்போதைய எதிர்கட்சி தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் வழங்கிய அவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் அடிப்படையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழகத்தில் 7% ஆக உயர்த்தக்கோரியும்,

பிரான்ஸ்: யூசுப் அல் கர்ளாவிக்குத் தடை


ஐரோப்பா கண்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு பிரான்ஸ். ஆனால் முஸ்லிம்கள் தங்களது மார்க்க நெறிகளைப் பின்பற்றுவதை முழுமையாகப் பின்பற்ற விடாமல் இடையூறு விளைவிக்கும் நாடாகவும் பிரான்ஸ் விளங்கு கிறது.
பிரான்ஸ், மேலை நாகரீக சீரழிவின் அடையாளமாக விளங்கி வருவதால் மேலை நாகரீக சீர்கேட்டினை துளியும்

வீடு சுவனமானால் சுவனமே நமது வீடாகும்!


சமுதாயத்தின் ஆணிவேர் குடும்பம் தான். . ! குடும்பங்கள் சிறந்தால் நாடே சிறக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. உலகில் தோன்றிய எல்லா மதங்களும் தத்துவங்களும் குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியே உள்ளன.


இதயத்தை காப்பாற்றும் வழி!


ங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் இதயத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறது.

 1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்?
மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம்.