புத்தாண்டின் கூத்துகளும், கேளிக்கைகளும்..,


ஜனவரி 1, 2011 (2012)...ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்...இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா...? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒரு நாள் தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்

இதன் நோக்கம்:  
நமது சமுதாய இளைஞர்கள் I.A.S படிப்பு என்றாலே "எட்டா கனியாக" நினைத்து மனதளவில் அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும், MLA, MP, அமைச்சர், பிரதம அமைச்சர் போன்றோர்களாலும்

இனிய மார்க்கத்தை தழுவிய- Actress Queenie Padilla (ஹதிஜா)-Video


மானிடனுக்கு அவனது உள்ளத்தில் நேர்வழியை காட்டிட கால அவகாசம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. சமீபத்தில் பிலிப்பைன்ஸில் பிரபலமாக அறியப்பட்ட குயினி படில்லா என்ற தாரகை தற்போது ஹதிஜாவாக தனது பெயரோடு தன்னையும் மாற்றிக் கொண்டு இனிய மார்க்கமான இஸ்லாத்திற்குள் ஐக்கியமாகியிருக்கிரார் - அல்ஹம்துலில்லாஹ்.

கோயிலைத் திறக்க உத்தரவிட்ட பாகிஸ்தான் நீதி மன்றம் :

நமது அண்டை நாடான பாகிஸ்தான், 'இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் பாகிஸ்தான் 'என்று அழைக்கப்படுவதால், அந்த நாட்டின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டிருப்பதால் பாகிஸ்தான் ஏதோ இஸ்லாமிய நாடு போன்றும், அங்கே இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது என்பது போன்றும் கற்பனை செய்துகொண்டு அந்த நாட்டை இஸ்லாமியத் தீவிரவாத நாடாகக் காட்டுவதில் 

பத்திரிக்கைகளுக்கு மனசாட்சியே கிடையாதா?

பத்தாம் நாள் போராட்டம், பதினொன்றாம் நாள் போராட்டம், பனிரெண்டாம் நாள் போராட்டம் என ஒவ்வொரு நாளும் முழுப்பக்க படங்களோடும், ஒவ்வொரு பக்கத்திலும் எதாவது தாக்குதல் செய்திகளுமாய் தினகரன் பத்திரிகை வெறிபிடித்து வருகிறது. டயர் எரித்தாலும் செய்தி. உம்மன் சாண்டியை எரித்தாலும் செய்தி. கேரள எல்லையில் கூட்டம் சென்றாலும் செய்தி. தனியாய்  நின்றாலும் செய்தி. கேரள மக்களுக்குச் சொந்தமான கடைகளை அடித்து நொறுக்கினாலும் செய்தி.

புதிய தலைமுறை டிவி


கேரளா மற்றும் மத்திய அரசை கண்டித்து SDPI நடத்திய தர்ணா


பெரியகுளம்:முல்லை பெரியாறு விவகாரத்தில் தேவையற்ற பிரச்சனையை உருவாக்கி அடாவடியில் ஈடுபட்டு வரும் கேரள அரசை கண்டித்தும், மௌனம் காத்து இரு மாநில மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வலியுறுத்தியும்,

சட்டபேரவையில் மமக தலைவர் ஆற்றிய உரை


தமிழக சட்டப்பேரவையில் 15.12.2011 அன்று முல்லைப் பெரியாறு தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அரசு கொண்டு வந்த தீர்மானம் மீதான விவாதத்தில் பங்குக் கொண்டு பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஆற்றிய உரை:

‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி :


http://www.mediaonetv.in/
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேரள மாநிலக் கிளையின் அடுத்த முயற்சியாக தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்பட உள்ளது.
‘மீடியா ஒன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்?


‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’
                                               (அல்-குர்ஆன் 17:31)

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!


நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்தி்லிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

கேன்சர் பற்றி ஜான்ஸ்ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்: 
1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது,

கை கொடுப்போமா…


நவ., 15ம் தேதி, ராமநாதபுரத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான முகாமில், ஊனமுற்றவர்கள் ஒவ்வொருவராக வந்து, தங்களது குறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் சொல்லிக் கொண்டு இருந்தனர். அப்போது, பள்ளி சீரூடை அணிந்த மாணவி ஒருவர், மெதுவாக வந்து, அதிகாரிகளை பார்த்து அழுதபடி கையெடுத்து கும்பிட்டார்.
அந்த மாணவி கும்பிடுவதை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி!
காரணம், மாணவியின் வலது கை முழங்கையுடன் துண்டிக்கப் பட்டு இருந்தது "வா தாயி...' என்று உட்கார வைத்து, "உனக்கு என்னம்மா வேணும்...' என்றதும், பொங்கி வந்த கண்ணீரை, தன் முழுமையற்ற கையால் துடைத்துக் கொண்டும், கேவிக் கொண்டும் அந்த மாணவி பேசலானார்...

கண்ணாடிகள் கவனம். = M அப்துல் ரஹ்மான் M.P.

நமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது.

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர்.

பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்


பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர்?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.

TMMK- பாபரி மஸ்ஜித் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


பாபரி மஸ்ஜித் 19 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்- TMMK சார்பில் சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குக் கொண்டனர்.
சென்னையில் சைதாபேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அவர் அப்போது பேசியதாவது-

இடதுசாரிகள் இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்

உலகில் மாறி வரும் சூழ்நிலைகளிலிருந்து அனுபவங்களையும் படிப்பினைகளையும் பெற்றுக்கொண்ட இஸ்லாமிய இயக்கங்களுடன் ஒத்துழைக்க இடதுசாரிகளும் ஜனநாயக அமைப்புகளும் தயாராக வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேரள மாநிலத் தலைவர் டி.ஆரிஃப் அலீ வேண்டுகோள் விடுத்துள்ளார். அரபு நாடுகளில் நிகழ்ந்து வரும் மக்கள் புரட்சியில் இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து அங்குள்ள இடதுசாரி அமைப்புகள் செயல்பட்டன. இந்த முன்மாதிரி இந்தியாவைப் பொறுத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.  அதற்கு அவர்கள் தயாராக வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி எதிர்பார்க்கின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.