கோவையில் ஒற்றுமையின் ஒன்று கூடல் :

கோவையில் கடந்த சில நாட்களாக பதட்டம் நிலவியது. மாவட்ட ஆட்சித்தலைவர் கருணகரன் அவர்கள் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு குறித்த அமைதிக்குழு கூட்டத்தை கூட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுயிட்டார், அனைத்து இஸ்லாமிய இயக்க அமைப்புகளுடன் (15-11-2012) வியாழன் மாலை3 மணியளவில் ஆட்சிமன்ற கூடத்தில் நடைபெற்றது.

கலந்துகொண்ட அரசு துறை அதிகாரிகள் :
காவல்துறைத் தலைவர் (கோவை மண்டலம்)
திரு.டி.பி.சுந்தரமூர்த்தி.இ.கா.ப., மாநகர காவல் ஆணையர்
திரு.ஏ.கே.விஸ்வநாதன்.இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர்
திருமதி.க.கற்பகம், துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து)
திரு.டி.செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர்
திரு.சாந்தகுமார், உதவி ஆட்சியர் பயிற்சி செல்வி.திவ்யதர்ஷினி.இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
திரு.வீரப்பன், துணை ஆட்சியர் (பயிற்சி)
திரு.பழனிக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.




கலந்துகொண்ட இஸ்லாமிய அமைப்புகள் :

கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத்
சுன்னத் ஜமாஅத்கொள்கைக்கூட்டமைப்பு
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (TMMK)
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (PFI)
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH)
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் (TNTJ)
இந்திய தௌஹீத் ஜமாஅத் (INTJ)
சிடிஎம், முஸ்லிம் லீக்,
SDPI, MMK, WPI

மேற்கண்ட ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பு சார்பாக திட்டமிட்டபடி எவ்வித கருத்துவேருபாடில்லாமல் ஆணித்தரமாக ஒரே குரலில் கோவை மாவட்ட ஆட்சி நிர்வாகத்திடம் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள்.


எல்லாப்புகழும் இறைவனுக்கே!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு மாநில மக்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தினரும் அதிகமாக உள்ள மாவட்டமாகும். நமது மாவட்டத்தின் எந்த பகுதியாக இருந்தாலும், சிறு சம்பவங்களாக இருந்தாலும் சிறிய சம்பவம் தானே என்று விட்டுவிடக் கூடாது. சிறு சம்பவங்கள் பல்வேறு சூழ்நிலைகளுக்கு வித்திட்டு விடும். எனவே, காவல்துறையினர் கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப்பட்ட தகராறுகளை, பிரச்சனைகளை பொதுப்பிரச்சனைகளாக கருதக்கூடாது. தனிப்பட்ட பிரச்சனைகளை தனிப்பட்ட முயற்சியில் அணுகி தீர்;த்துக் கொள்ள வேண்டும். அவைகளை பொது பிரச்சனைகளாக மாற்ற முயற்சிக்கக் கூடாது. இளைஞர்களுக்கு தக்க அறிவுரைகள் கூறி உணர்ச்சிவசப்படாமல் கட்டுப்படுத்துவது அனைவரின் கடமையாகும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து தொடர் சம்பவங்கள் ஏற்படாதவாறு காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதுடன் அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்திட வேண்டும்.

நமது கோயம்புத்தூர் மாவட்டம் கல்வி, தொழில் மற்றும் பல்வேறு வழிகளில் நல்ல முன்னேற்றத்தில் உள்ளது. இந்த வளர்ச்சி தொடர்ந்து நீட்டிக்கவும், வளர்ச்சி தங்கு தடையின்றி மேலும் வளர்ச்சியடையவும் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடனும், மனம் பாதிக்காத வகையிலும், புண்படாத வகையிலும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு நிர்வாக ரீதியாக சுனக்கம் ஏற்பட்டால் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அலுலர்களை அணுகி தீர்த்துக் கொள்ள வேண்டும். எனவே அனைவரும் ஒற்றுமையாக சகோதர உணர்வுடன் இருக்க வேண்டும் எனப் பேசினார்.

- தகவல் :கோவை தங்கப்பா