பிரான்ஸ்: யூசுப் அல் கர்ளாவிக்குத் தடை


ஐரோப்பா கண்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு பிரான்ஸ். ஆனால் முஸ்லிம்கள் தங்களது மார்க்க நெறிகளைப் பின்பற்றுவதை முழுமையாகப் பின்பற்ற விடாமல் இடையூறு விளைவிக்கும் நாடாகவும் பிரான்ஸ் விளங்கு கிறது.
பிரான்ஸ், மேலை நாகரீக சீரழிவின் அடையாளமாக விளங்கி வருவதால் மேலை நாகரீக சீர்கேட்டினை துளியும்
ஏற்றுக்கொள்ளாத பிரான்ஸ், முஸ்லிம் தாய்மார்கள் அணியும் முக்காட்டை பொது இடங்களில் அணியக்கூடாது என தடை விதித்துள்ளது. மீறி அதனை அணிந்தால் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்நாடு சட்டம் இயற்றியுள்ளது. இது சர்வதேச அளவில் சமூக ஆர்வலர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு தேவையற்ற வேலை என பிரான்ஸை நேரடியாகவே கண்டித்தார் அமெரிக்க அதிபர் பாரக் ஹுசைன் ஒபாமா.
இந்நிலையில் பிரான்ஸில் ஏப்ரல் 6ஆம் தேதியில் இருந்து 9 வரை இஸ்லாமிய மாநாடு நடைபெற்றது. இதை பிரான்ஸில் செயல்படும் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைத்தது.
இம்மாநாட்டில் பங்கேற்கவிருந்த முக்கிய இஸ்லாமிய அழைப்பாளர்களை பிரான்ஸ் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்திருக்கிறது. யூசுப் அல்கர்ளாவி, மஹ்மூத் அல்மஸ்ரி, தாரிக் ரமதான், அக்ரிமா சப்ரி, அயத்பின் அப்துல்லாஹ் அல்கர்னி, சஃப்வத் அல் ஹிஜாஸி, அப்துல்லாஹ் பஸ்ஃபர் உள்ளிட்ட முஸ்லிம் அறிஞர்கள் பிரான்ஸில் நுழைந்தால் பிரான்ஸ் நாட்டின் கொள்கைகளுக்கு விரோதமாகவும் வன்முறைகளைத் தூண்டிவிடுவதாகவும் அமையும். எனவே அவர்களை பிரான்ஸில் நுழைய தடை விதிக்கப்பட்டதாக பிரான்ஸ் அதிபர் சர்கோஸி நேரடியாக அறிவித்தார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய அழைப்பாளர் தாரிக் ரமதானை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது வருத்தத்திற் குரிய செயல் என பிரான்ஸ் அதிபர் நிக்கலஸ் சர்கோஸி தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம் பாரீசில் யூத பள்ளிக்கூடம் ஒன்றின் மீது ஒரு மர்ம மனிதன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த சம்பவத்தையும் அவன் சார்ந்த மதத்தையும் தொடர்புபடுத்தி பிரான்ஸ் நாட்டில் சில ஊடகங்களும் நிறவெறியர்களும் சர்ச்சைகள் ஏற்படுத்தி இருக்கின்றன. இதுகுறித்து தாரிக் ரமதான் செய்தியாளர்களிடம் பேசும்போது முஹமது மொராஹ் (யூத பள்ளிக்கூடத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவன்) பிரான்ஸின் மைந்தன் ஆவார். அவர் அல்ஜீரியாவின் மைந்தன் அல்ல என்று கூறிய ரமதான் முஹம்மது மொராஹ், ஆக்கிரமிப்பு அரசியல் கண்டு மனம் வெறுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாலஸ்தீன விவகாரங்களால் மனம் வெறுத்துப்போன அந்த இளைஞன் வெறி பிடித்த காரியத்தைச் செய்துள்ளான்.
அவனது வெறுப்பு ராணுவத்தின் மீதுதான், அவனுக்கு யூதர், கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் என்ற வேறுபாடு அவன் பார்க்கவில்லை. நிறவெறியை எதிர்த்து அவன் கிளர்ந்து எழுந்துள்ளான். அதற்கும் இஸ்லாமிய அழைப்பாளர்களின் பிரான்ஸ் பயணத்திற்கும் முடிச்சுப் போடும் செயல் ஏன் என்றும் கேள்வி விடுத்தார்.
நாடு தழுவிய இஸ்லாமிய மாநாடு பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் நடைபெறும்போது சர்வதேசப் புகழ்பெற்ற யூசுப் அல்கர்ளாவி உள்ளிட்ட இஸ்லாமிய அறிஞர்களை பிரான்ஸில் உள்ளே நுழைய அனுமதி மறுத்த பிரான்ஸ் அரசின் செயல் அந்நாட்டிற்கு நிச்சயம் பெருமை சேர்க்காது.
--சப்ரன் ஹபீப்
http://www.tmmk.in/