சமுதாயத்தின் ஆணிவேர் குடும்பம் தான். . ! குடும்பங்கள் சிறந்தால் நாடே சிறக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. உலகில் தோன்றிய எல்லா மதங்களும் தத்துவங்களும் குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியே உள்ளன.
‘குடும்பங்களை அமைதி அளிக்கும் இடமாக ஆக்கினோம்” என்று இறைவன் திருமறையில் கூறுகிறான்.
ஆனால் அண்மைக்காலமாக நம் நாட்டில் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் படையெடுப்பால், ஊடக ஊடுருவலால் பல சீர்கேடுகள் மலிந்துவருகின்றன. அந்தச் சீர்கேடுகளுக்கு முதல் பலி குடும்ப அமைப்புதான். மணவிலக்கு பிரச்னை தொடங்கி மாற்றானுடன் ஓடிப்போதல் வரை நடைபெறும் இழிவுகளுக்குக் காரணம் குடும்ப அமைப்பு சீர்குலைந்ததுதான்.

இந்த நிலையை மாற்ற எழுந்துள்ளது கோவை ஜமாஅத்தே இஸ்லாமி கிளை.
‘ ‘உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுங்கள்’ ’ எனும் குர்ஆன் கட்டளை இவர்களை உந்தித்தள்ள, சுவனம் நமது வீடுகளில் எனும் தலைப்பில் மாபெரும் கண்காட்சிக்கும் கருத்தரங்கிற்கும் நாள் குறித்துவிட்டு கடுமையாக உழைத்துவருகிறார்கள்.
ஆம்..! நெருப்பிலிருந்து மக்களைக் காக்க வேண்டுமே எனும் பொறுப்பு உணர்ந்து புத்தெழுச்சியுடன் பாடுபட்டு வருகிறார்கள்..!
இந்தக் கண்காட்சியின் லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி 25 .3 .12 அன்று நடைபெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த உறுப்பினரும் எழுத்தாளரும் கவிஞருமான பி. ஏ . சையத் முஹம்மத் அவர்கள் லோகோவை வெளியிட விழா அமைப்பாளர் எம். ஷஹீர் பெற்றுக்கொண்டார்.
இந்தக் கண்காட்சியும் கருத்தரங்கும் மகத்தான வெற்றி பெற வாழ்த்துகள்..!
வீடு சுவனமானால் சுவனமே நமது வீடாகும்!