துபை ஈமான் அமைப்பின் உயர்கல்வி உதவித்திட்டம்:

துபை இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்– www.imandubai.com ) இன்ஷா அல்லாஹ் வழக்கம் போல் இவ்வாண்டும் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்க உள்ளது.

2012 ஆம் ஆண்டு S.S.L.C. மற்றும் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து,மேற்படிப்பைத் தொடர வசதியற்ற, திறமையும் ஆர்வமும் மார்க்கப் பற்றுள்ள மாணவ –மாணவியர்கள் கலை/அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப பட்டயம் / பட்டப்படிப்புத் திட்டத்திற்கு வரவேற்கப்படுகின்றனர்.

JOURNALISM (இதழியல்), I.A.S., ( இந்திய ஆட்சிப் பணி ), I.P.S., போன்ற படிப்பில் சேர்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் ஈமான் கல்விக்குழுவின் பரிந்துரைப்படி உதவித்தொகை( SCHOLARSHIP ) வழங்கப்படும்.

தேர்வு முடிவுகள் வெளியான பின்னர்
i.         மதிப்பெண் சான்றிதழ் நகல்
ii.        மாணவ/மாணவியர் பெயர்
iii.       பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
iv.       பிறந்த தேதி
v.        முழு முகவரி தொலைபேசியுடன்
vi.       பெற்றோர் பெயர்
vii.      தொழில் மற்றும் மாத வருமானம்
viii.       குடும்பம் பற்றிய தெளிவான சிறு குறிப்பு
ix.        ஜமாஅத் பரிந்துரை கடிதம்

உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விண்ணப்பித்தை IMAN EDUCATIONAL SCHOLARSHIP COUNCIL என்று தலைப்பிட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பத்தை www.imandubai.comஎனும் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் ( Download ) செய்து கொள்ளலாம்.

INDIAN MUSLIM ASSOCIATION ( IMAN )
P O BOX NO. 13302
DUBAI – U.A.E.
info@imandubai.com
www.imandubai.com

கடைசி தேதி : 30 ஜுன் 2012

குறிப்பு :

விண்ணப்பத்தை அஞ்சலில் மட்டுமே அனுப்பவும்

விண்ணப்பத்தை பதிவு அஞ்சல் ( Registered Post ) மற்றும் மின்னஞ்சல் ( E-mail ) அனுப்ப வேண்டாம்.
Iman Proof