சென்னையில் குட்வேர்ட் பப்ளிக் ஸ்கூல் துவக்க விழா

சென்னை செங்குன்றம் கோணிமேட்டில் குட்வேர்ட் பப்ளிக் ஸ்கூல் துவக்க விழா 17.06.2012 அன்று காலை நடைபெற்றது. முதஸ்ஸிர் அவர்களின் கிராஅத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனுடைய தமிழாக்கத்தை சிராஜுல் ஹசன் அவர்கள் வாசித்தார்.

கல்வி – ஒழுக்கம் – உயர்வு (Education – Ethics – Excellence) என்ற இலக்குடன் இப்பள்ளி துவங்கப்பட்டுள்ளது.

காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர்:

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் மத்தியில் குழப்பம் விளைவிக்க காதியானி வகைறாக்கள் முயற்சி செய்கிறார்கள். அண்மைக் காலமாக சென்னை, மேலப்பாளையத்தை அடுத்து தற்போது கோவையில் இந்த தீக்குறும்பர்களின் திருகுதாளச் செயல்பாடுகள் இலேசாகத் தலைகாட்டத் தொடங்கியுள்ளன.

ஜூஸ் பாக்கெட்டுக்குள் பாம்பு குட்டி:


கர்நாடக மாநிலம் உத்தர்கன்னடா பகுதியைச் சேர்ந்தவர் செய்யது முகம்மது சப்வான். இவர் அருகில் உள்ள பேக்கரியில் இருந்து பிரபல கம்பெனி தயாரிப்பான மாம்பழ ஜூஸ் பாக்கெட்டுகளை வாங்கி வந்தார். அதில் ஒரு பாக்கெட்டை எடுத்து அவரது மகள் சாஹிபா (22), சிறிய துளை வழியாக ஸ்டிரா மூலம் உறிஞ்சி குடித்தாள்.

குறைப்பிரசவ குழந்தைகள்:


ஐக்கிய நாடுகள் சபையின் 40க்கும் மேலான அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து, குறைப் பிரசவக் குழந்தைகள் குறித்து உலக அளவில் அறிக்கை ஒன்றினைத் தயாரித்துள்ளன. அதில் இந்தியா முன்னணியில் இருப்பதாக அதிர்ச்சி செய்தி ஒன்றினை அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. குறைப்பிரசவக் குழந்தைகள் பற்றி கணக்கெடுக்கப்பட்ட 199 நாடுகளில் இந்தியா 36வது இடத்தில் இருக்கிறது.

சமுதாயத்தலைவர்களின் ஒன்றுகூடலுடன் உதயமானது மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி

கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமியின் சார்பில் குல்லியத்துல் ஹிதாயா மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி இனிதே உதயமானது,
கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத், மற்றும் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு நிர்வாகிகள், உலமாக்கள், நகர முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில்,

காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காளான், பேல் பூரி, பானி பூரி விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் முளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் ரூ. 10 என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் மொய்க்கிறது. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும் விரும்பி காளான் உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.