தீபாவளி :காசு கரியாகுது..! காற்று மாசாகுது..!



தீபாவளி நெருங்கிவிட்டது. மாற்று மத அன்பர்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு இணையாக சத்திய இஸ்லாத்திற்கு சான்றாய் விளங்கும் முஸ்லிம் சமுதாயமும் பட்டாசுகளை வெடிக்கிறது என்பது வருத்தமளிக்கிறது.




பள்ளிவாசலுக்கு சந்தா கொடுப்பதற்கும், இஸ்லாமிய இதழ்கள் வாங்குவதற்கும், இறைவழியில் செலவிடுவதற்கும் யோசிக்கும் நாம் நம் குழந்தைகளுக்கு பட்டாசுகள் வாங்கிக் கொடுக்கத் தயங்குவதில்லை.

நம்மைப் படைத்த இறைவன் கூறுகிறான்: வீண் செலவு செய்யாதீர். திண்ணமாக வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள் ஆவர். (அல் குர்ஆன் 17 : 27)

அல்லாஹ் நம்மை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பானாக! ஆமீன்
இதற்கான ஒரு பொய்யான காரணத்தை சொல்லுவார்கள். குழந்தை கேட்டு அடம்பிடிக்கிரதாம். அப்படியானால் குழந்தை எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடுகிறோமா என்ன?

இதோ ஒரு நெகிழ வைக்கும் நிகழ்வு. ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவன் தன தந்தையிடம் ஒரு மிட்டாயை கேட்டு அடம்பிடிக்கிறான். தந்தை அதன் மூலப்பொருள் ஹராம் என்று சொன்னவுடன் அழுகையை நிருத்திவிடுகிறான். “ஹராமான உணவை உண்ணக்கூடாது என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்” என்றான் சிறுவன். இது நிகழ்கால உதாரணம். நமக்கான படிப்பினையும் கூட. நாம் நமது குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம்? சிந்திக்கவும்...

வெடி வெடிப்பதும், பிறருக்கு துன்பம் தருவதும் புவியை மாசுபடுத்துவதும் நமது கலாச்சாரம் அன்று.

இதோ நமது உயிரினும் மேலான நபிகளார் கூறுகிறார்கள்:

“யார் பிற சமுதாயக் கலாச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ, அவர் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவரே!” – இப்னு உமர்(ரலி) (அபூதாவூது(4033))

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர், தன் அண்டை வீட்டாருக்கு தொந்தரவு தர வேண்டாம்’ – அபூஹுரைரா (ரலி) (புஹாரி(5187))

இறைவன் நம்மையும் நம் சமுதாயத்தையும் சமூகத் தீமையிலிருந்து காப்பானாக! ஆமீன்.

H. நிஷார் - கோவை