இதயத்தை காப்பாற்றும் வழி!


ங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் இதயத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறது.

 1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்?
மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம்.

2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்?

முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது. இதன் மூலம் இதயம் சீராகச் சரியான எண்ணிக்கையிலும் துடிக்கிறதா என்று  அறிந்து கொள்ள முடியும்.

 3. எப்போது நாடித்துடிப்பைப் பரிசோதனை செய்யலாம்?

நீங்கள் நல்ல ஓய்வில் இருக்கும்போது, காஃபின், நிக்கோடின் போன்ற ஊக்கிகளைப் பயன் படுத்தாது இருக்கும் போதும்.

 4. நாடித்துடிப்பின் இயல்பான அளவு என்ன?

ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை. உங்கள் மன அழுத்தம், நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மருந்துகள் போன்ற வற்றால் உங்கள் நாடித்துடிப்பு குறையவோ,  கூடவோ செய்யலாம்.

 5. எப்பொழுது நாடித்துடிப்பு சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்?

நாம் ஒவ்வொருவரும் தனித்தனியான இயல்பு உள்ளவர்கள். ஆகவே பொது வான ஒரு வரையறையைச் சொல்வது கடினம். நாடித்துடிப்பு சிலருக்கு 100க்கு மேல் இருக்கலாம். சிலருக்கு 60க்குக் கீழ் இருக்கலாம். தொடர்ந்து 120க்கு மேல் இருந்தாலோ அல்லது தொடர்ந்து 40க்குக் கீழ் இருந்தாலோ நீங்கள் மருத்துவ ஆலோசனையைப்  பெற வேண்டியது அவசியம்.

உங்கள் நாடித்துடிப்பு என்பது உங்கள் இதயம் துடிக்கிற அளவு. இதை இதயத் துடிப்பு அளவு (ஹார்ட் ரேட்) என்கிறோம். ஒரு நிமிடத்திற்கு உங்கள் இதயம் துடிக்கிற  எண்ணிக்கையின் அளவு இது.

இதயத்துடிப்பு நபருக்கு நபர் வயது, மனநிலை, செய்கிற வேலையைப் பொறுத்து மாறுபடும். இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு இவற்றின் எண்ணிக்கை மாறுபடுவது, சீரற்ற தன்மை  இரண்டுமே இருதய நோய் களாலோ அல்லது இருதயம் தொடர் புடைய வேறுசில பிரச்னைகளாலோ ஏற்படலாம். இதனை இதயத்தின் சீரற்ற தன்மை  கார்டியாக் அரித் மியா என்று சொல்கிறோம். ஆகவே உங்கள் நாடித் துடிப்பை அறிந்து கொள்வது உங்கள் இதயத்தை அறிந்து கொள்வது ஆகும்.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலை

இந்நிலை மிகவும் ஆபத்தானது. ஆனால் சிகிச்சை மூலம் சீர் செய்யக் கூடிய நிலை. இந்த நிலையில் இதயத்தைச் செயல்படுத்துகிற மின் துடிப்புகள் ஒன்றுடன் ஒன்று  சரியான முறையில் இணைந்து செயல்படாமல் இருக்கும். இதனால் இதயம் அதிக வேகத்திலோ அல்லது மிகக் குறைவான வேகத்திலோ அல்லது ஒழுங்கற்ற முறையிலோ  துடிக்கக் கூடும்.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் வகைகள்

இதில் பல வகைகள் இருக்கின்றன. PSVT என்கிற ஒரு வகை பொதுவாக காணப் படுகிற வகை. இதில் இதயத்தின் அதிகத் துடிப்பு இதயத்தின் மேற்பகுதி அறை  களில் இருந்து ஏற்படுகிறது. மற்றொரு வகை கிதி என்பது. இதில் இதயத்தின் மேல் பகுதி அறைகளில் இருந்து அதைவிட மிக அதிகமான மேலும் ஒழுங்கற்ற துடிப்புகள்  ஏற்படும். க்ஷிஜி மற்றொரு வகை. இதில் அதிக துடிப்பு இதயத்தின் கீழ்ப் பகுதி அறைகளில் இருந்து ஏற்படும். இது உயிருக்கு ஆபத்தானது.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலைகளை ஏற்படுத்தும் பொதுவான காரணங்கள்

ரத்தக் கொதிப்பு, புகை பிடிப்பது, குடிப்பழக்கம், கட்டிகள் போன்றவை இதயத்துடிப்பின் சீரற்ற நிலை ஏற்படு வதற்கு மிகப் பரவலான காரணங்கள். தவிர இருதய ரத்தக் கு ழாய் நோய்கள், இருதய வால்வு பிரச்னைகள், இருதயத் தசைகளைத் தாக்கும் நோய்கள், இருதயத் துடிப்பு உருவாகும் இடத்தில் ஏற்படும் நோய்கள், இருதயத்தைச் சுற்றி  இருக்கிற உறையில் ஏற்படும் அழற்சி சிளிறிஞிஎன்கிற நீண்ட நாள் மூச்சுக்குழல் அடைப்பு நோய்கள் போன்றவையும் இதயத் துடிப்பின் சீரற்ற நிலை உருவாகக்  காரணங்களாக அமைகின்றன.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் அறிகுறிகள்.

படபடப்பு, விட்டு விட்டு நாடித்துடிப்பு, தலைப் பாரம் மற்றும் லேசான தலை சுற்றல், தளர்ச்சி, மூச்சு வாங்குதல், மயக்கம் அல்லது மயக்கம் வருகிற நிலை ஆகியவை.

இதயத்துடிப்பு சீரற்ற நிலையின் தொடர் நிகழ்வுகள்

பெரும்பாலான இதயத்துடிப்பு சீரற்ற நிலை பொதுவாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சில ஆபத்தான வை. உயிருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதயம்  சீரற்றுத் துடிக்கும் போது போதுமான அளவு ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த முடியாமல் சிரமப்படும். போதுமான ரத்தம் கிடைக் காமல் மூளை, இதயம் மட்டுமல் லாமல் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். ஏற்றிரியல் சுப்ரலேஷன், ஏற்றிரியல் ஃப்ளட்டர் என்னும் இரண்டு வகை மிகப் பரவலாகக் காணப் படுகின்றன. இவை இதய  மேற்புற அறைகளில் இதய ரத்தம் சேர்வதற்கு வழி செய்வதன் மூலம் ரத்த உறைவு ஏற்படுகிற நிலையை அதிகரிக்கின்றன. இதனால் பக்கவாதம் வருகிற பாதிப்பு  அதிகரிக்கிறது.

மிக ஆபத்தான இதயத்துடிப்பு சீரற்ற நிலையைக்கூட வெற்றிகரமாக சிகிச்சை செய்து சரிப்படுத்த முடியும். இந்நிலை யில் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் வழக்கமான  ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதயத்தின் இந்நிலையை முன்பே அறிந்து கொள்வது தான் மிக முக்கியமானது. உங்கள் நாடித் துடிப்பைத்  தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் உங்களுக்கு இந்தப் பிரச்னை உள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியும்.

இதயத்துடிப்பு சீரற்ற நிலைக்கான சிகிச்சை

இதற்கான சிகிச்சை வகைகளைப் பொறுத் தும், எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பொறுத்ததும் மாறுபடும். மருந்துகள் வாழ்க்கை முறை மாற்றம், மின் அலைக் கருவிகள்  பயன்படுத்தும் சிகிச்சை போன்றவை உண்டு. மின் அலைக் கருவியைப் பயன் படுத்தி சிகிச்சை செய்வதால் வாழ்க்கை முழுவதும் மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்க்க  முடியும்.

நாடித்துடிப்பை எப்படி பரிசோதிப்பது?

உங்கள் ஆள் காட்டி, இரண்டாவது, மூன்றாவது விரல்களின் நுனிகளை அடுத்த கையின் மணிக்கட்டின் கட்டை விரலின் அடிப்பாகத்திற்குச் சற்று கீழே வைக்கவும். விரல்களை லேசாக அழுத்தவும். நாடித் துடிப்பை இப்போது உணர முடியும்.

ஒரு கடிகாரத்தைப் பயன்படுத்தி 30 வினாடிகளுக்கு எத்தனை நாடித் துடிப்பு என்று கணக்கிடுங்கள். இதனை இரண் டால் பெருக்கவும். வருகிற விடையே உங்கள் நாடி த்துடிப்பு.

உங்கள் நாடித்துடிப்பு ஒழுங்கற்று இருந் தால் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு கணக் கிடுங்கள். முப்பது விநாடிகளில் நிறுத்த வேண்டாம்.

thanks:Tamil source
Engr.Sulthan