சமுதாயத்தலைவர்களின் ஒன்றுகூடலுடன் உதயமானது மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி

கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமியின் சார்பில் குல்லியத்துல் ஹிதாயா மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி இனிதே உதயமானது,
கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத், மற்றும் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு நிர்வாகிகள், உலமாக்கள், நகர முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில்,
அனைத்து இயக்க சமுதாயத்தலைவர்களின் ஒன்றுகூடலுடன், குல்லியத்துல் ஹிதாயா மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி என்ற பெயரில் பெண்களுக்கான அரபிக்கல்லூரியின் துவக்க விழா  03-06-2012 (ஞாயிறு) மாலை 5 மணிக்கு சங்கமம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கல்லூரியின் துவக்க விழாவில் ஜனாப் E உம்மர் (மாநில செயலாளர் தமுமுக), ஜனாப் இப்ராகிம் பாதுஷா (மாநில செயற்குழு உறுப்பினர், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா), M.நூருல் ஹசன் (மாநில தலைவர் எஸ்.ஐ.ஓ), ஜனாப் ஜாபர் அலி (மாநில செயலாளர் இந்திய தௌஹீத் ஜமாஅத்), ஜனாப் M. அமீர் அல்தாப், (தலைவர், ஐக்கிய ஜமாஅத்) ஜனாப் A.அப்துல் ஜப்பார் (பொது செயலாளர், ஐக்கிய ஜமாஅத்) மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.


ஜமாஅத்தே இஸ்லாமி கோவை நகரத் தலைவர் P.S.உமர் பாரூக் அவர்களின் தலைமையில், மாநில பொது செயலாளர் மௌலவி முஹம்மது ஹனீபா மன்பஈ அவர்கள் துவக்கவுரையாற்ற, கல்லூரி தாளாளர் மௌலவி M.M.முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் அறிமுக உரையாற்றினார்.
பின்னர் நவீன உலகில் ஆலிம்கள் பங்கு என்கிற தலைப்பில் ப்சலுல் உலமா. மௌலவி அ.முஹம்மது கான் பாஸில் பாகவி அவர்களும்,
சமூக சீரமைப்பில் மதரசாக்கள் பங்கு என்கிற தலைப்பில் கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக்கல்லூரியின் முதல்வர் முனைவர். மௌலவி P.S.செய்யித் மஸ்ஊத் ஜமாலி அவர்களும்,
வரலாற்று ஒளியில் ஆலிம்கள் என்கிற தலைப்பில் மௌலவி முஹம்மது நூஹ் மஹ்லரி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

நவீனமயமான வகுப்பறைகள் கொண்ட ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் சிறப்பு அம்சங்கள்:
  • மூன்றாண்டு ஆலிமா பட்டப் படிப்பு,
  • வருடத்திற்கு இரண்டு செமஸ்டர்கள்,
  • முற்றிலும் விரிவான, முழுமையான நவீன பாடத்திட்டம்,
  • தஜ்வீத்,உஸூலுத்தப்சீர், உஸூலுல்ஹதீஸ்,  உஸூலுல் பிக்ஹு ஆகிய கலைகளுக்குரிய பாடங்கள். மென் பொருள்களுடன் ( software ) அகன்ற திரையில் விளக்கம்.
  • அடிப்படை கணினிப்பாடத்துடன் கிராபிக் அப்ளிகேஷன்ஸ் மற்றும் விஷூவல் மீடியா பயிற்சிகள்.
  • பேச்சுப்பயிற்சி மற்றும் எழுத்துப்பயிற்சி.
  • சிறப்பான அரபி, ஆங்கில, தமிழ் மொழிப் பயிற்சிகள்,
  • அரபு நாட்டு அரபி இலக்கணப்பாட முறைகள்,
  • Assignment and Project Works
  • களப்பயிற்சியுடன் அழைப்பியல் (தவா) பாடங்கள்,
  • பிரத்யேக தொழுகைக்கூடம்.
  • நவீனமயமான ( Smart Class Rooms) வகுப்பறைகள்.
  • மாணவியருக்கு I,D கார்டுடன் தனிச்சீருடை,
  • திறமையான பெண் முதல்வர் மற்றும் ஆசிரியைகள்.
  • குறிப்பிட்ட பாடங்களுக்கு Visiting Lecturers வருகை.
  • சிறப்பாபாதுகாப்பு
  • ஆர்வத்துடன் கல்வி கற்கும் சூழல்.
ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி குறித்து மேலும் விபரங்களை பெற தொடர்பு கொள்ளுங்கள். தாளாளர்:
மௌலவி M.M முஹம்மது இஸ்மாயில் இம்தாதி : +91 9787 33 6456
செய்தி: அபு சஹ்லா