முஸ்லிம்களுக்கு மூன்று தொகுதி....!


      ஒவ்வொரு முஸ்லிம் கட்சிகளும் தொகுதி வாங்குவது அவர்களது கட்சியில் இருக்கும் மக்களின் அளவிற்கு தானே தவிர மொத்த முஸ்லிம்களுக்கு அல்ல ..!
                                        மின்னஞ்சல் பதிவுகள்..!   பாமக,மதிமுக,தேமுதிக போன்ற கட்சிகள் அதிக எண்ணிக்கையில் சீட்டுகள் கேட்டு நிர்பந்திக்கவும்,அந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க,பெரிய கட்சிகள் விரும்புவதர்க்கும் காரணம் என்ன என்பதனை முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்கள் சிந்திக்க மறுப்பது ஏனோ?
    *அந்த கட்சிகள் தனித்து போட்டியிட்டு குறிப்பட்ட சதவிகித ஓட்டுக்களை பெற்றதே காரணம்* என்ற உண்மையை உணர மறுப்பதும் ,அல்லது மறந்ததும் ,ஏனோ? ஒரு சோதனை முயற்சியாக கூட இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றிணைத்து ஒரு கூட்டணி அமைத்து போட்டியிட முன்வராதது ஏன்?சோதனைகள் சாதனையாக மாறிட வாய்ப்புகள் கூட உள்ளதே!உசிலம்பட்டியில் ஒரே ஒரு ஊராட்சில் மற்றும் செல்வாக்கு பெற்ற பார்வர்ட் ப்ளாக் கட்சிக்கு ஒரு சீட்டு.தமிழகம் முழுவது பரவலாக கிளைகள் கொண்ட ம. ம.கவிற்கு மூன்று சீட்டு. பார்வர்ட்ப்லாக் கட்சியும் தன் சொந்த சின்னத்தில்தான் போட்டியிடபோவதாக அறிவித்துள்ளது.சொந்த சின்னத்தில் போட்டியிடுவதே பெரும் சாதனையாக இஸ்லாமிய இயக்கங்கள் கருதுவது வேதனை.அதிக எண்ணிக்கையில் சீட்டுகள் கேட்டு ம.ம.க. மட்டுமல்ல தேர்தலில்
    போட்டியிடும் எல்லா இயக்கங்களுமே விரும்பவும் வலியுருத்தவுமே
    செய்யும். கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி ஒன்பது இடங்கள் கேட்டு
    அடம்பிடிப்பதாக செய்திகள் வருகிறது.அமைப்பு ரீதியாக வலுவில்லாத இவர்களே நிர்பந்தம் செய்யும் போது ம.ம.க. ஏன் செய்யவில்லை என்பதே அனைவரின் ஆதங்கம் .
      கூட்டணிக்காக திராவிட கட்சிகளின் கதவுகளை தட்டும் நாம் ஏன் நமது சகோதர அமைப்புக்களின் கதவுகளை தட்டக்கூடாது ?
       நாங்கள் உண்மையாகவே எங்களுக்காக இயக்கம்நடத்தவில்லை சமுதாயத்துக்காகவே நடத்துகிறோமென்றால்ஜவாஹிருல்லாவும், பி.ஜெ-யும் பழைய கசப்புகளை மறந்து ஒன்றுசேர வேண்டும் இது நடக்குமா..? மற்ற தலைவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
        
      அருமை சகோதரரே. இறைவன் திருகுர்ஆனில் சொல்லி உள்ள ஒற்றுமையை மறந்து, முஸ்லிம்கள் சுக்குநூறாகி சிதறி உள்ள சூழ்நிலையில், உண்மையில் முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.
       இன்ஷா அல்லாஹ் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து, மற்றவர்களுக்கு பாடம் கற்றுத்தரும் நாள் வெகு சமீபத்தில்.
               
      கூட்டணிக்காக திராவிட கட்சிகளின் கதவுகளை தட்டும் நாம் ஏன் நமது சகோதரஅமைப்புக்களின் கதவுகளை தட்டக்கூடாது ? சமுதாயம் மட்டும் முக்கியம் என்று சொல்லும் நாம் அனைத்து சமுதாய தலைவர்களையும் ஒன்று சேர்க்க முயர்ச்சிக்காதது ஏன் ?
      பி ஜே வாக இருக்கட்டும் ஜவாஹிருல்லாஹ் வாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று சேராமல் அடம் பிடிக்கும் நோக்கம் என்ன ? சமுதாய தலைவர்கள் ஒன்று பட மாட்டார்கள் என்றால் எப்படி நம் சமுதாயத்தை காப்பாற்றுவார்கள்..???//*
      இத்தகைய கேள்விகள் கேட்போர் அந்த 10 சதவீதத்தில் இணைக்கப்படுவர்! நானும் அந்த 10 சதவீதத்தில் ஒருவனாக இருக்க ஆசைப்படுகிறேன்.
        மறைந்த பன்மொழிப்புலவர் இந்திய தேசியலீகின் தமிழ் மாநில தலைவராகவும் அகில இந்திய பொது செயலாளராக இருந்த ஷம்ஷூரே மில்லத் அப்துல் லத்தீப் சாஹிப் அவர்கள் இறுதியாக அதிமுக கூட்டணியில் இணைந்து தனி சின்னத்தில் (பஸ் சின்னம்) போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதனை பேராசியரியர் மறந்து விட்டாரா அல்லது மறைக்க விரும்புகிறாரா?
        தேர்தல் என்பது மக்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் விஷயம். இதில் 9 கோடி மக்களில் 1 கோடி முஸ்லிம்கள் என்று வைத்தால் கூட, முஸ்லிம்களின் தொகை 11 % ஆகும். 234 , 11 % = 25 தொகுதி கிடைத்தல் தான் அறிவுபூர்வம், அதில் பாதி 12 அல்லது 13 கிடைத்தால் கூட அது சந்தர்ப்பம். வன்னியர்கள் தமிழ்நாட்டில் 30 % என்றாலும் கூட அவர்களுக்கு 31 தொகுதி என்பது, அவர்களின் முன்னேற்றத்திற்கு போதுமானது, ஆனால் இந்த 2 , 3 என்று முஸ்லிம்களுக்கு தொகுதி பிரிப்பதும் அதை தற்போதைக்கு ஏற்றுகொள்வோம் என்று சொல்வதும் இன்னும் முஸ்லிம்களுக்குள் அறிவு முதிர்ச்சி ஏற்ப்படவில்லை என்றும் இன்னும் சில வருடங்கள் ஏமாறலாம் என்ற நல்லெண்ணமும்? உள்ளதாகவே தோன்றுகிறது. 
        ஒவ்வொரு முஸ்லிம் கட்சிகளும் தொகுதி வாங்குவது அவர்களது கட்சியில் இருக்கும் மக்களின் அளவிற்கு தானே தவிர மொத்த முஸ்லிம்களுக்கு அல்ல என்று தோன்றுகிறது.