MMK தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை :


              இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் அணைகள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள அணை பாதுகாப்புச் சட்ட முன்வடிவில் அணையின் பாதுகாப்பு அது இருக்கும் மாநில அரசின் பொறுப்பில் இல்லாமல் எந்த மாநிலத்திற்கு அந்த அணைச் சொந்தமோ அந்த மாநிலத்தில் உள்ள அணை பாதுகாப்புக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறோம்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்க கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி என்பதை மீண்டும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளதை வரவேற்கிறோம்.
தானே புயலில் பாதுகாக்கப்பட்ட மாவட்டங்களில் ரூபாய் ஆயிரம் கோடி செலவில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்ற அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதேநேரத்தில் எவ்வித பாரபட்சமுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இந்த வீடுகள் முறையாக கிடைக்க அரசு ஆவண செய்யவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
நகர்ப்புறத்தில் வறுமையில் வாடும் மக்களின் வறுமையைப் போக்க ஒரு முழுமையான திட்டம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதையும் வரவேற்கிறோம்.
12வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் (சென்ற ஐந்தாண்டு திட்டத்தைவிட 1 கோடி அதிகமாக) செலவிடப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்.
தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆனபின்பும் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை முழுமையான நீக்கிட உடனடி நடவடிக்கைப் பற்றி ஆளுநர் உரையில் குறிப்பிடாதது வருந்ததக்கது.
69சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக முதல்வர் கடந்த காலங்களில் முனைப்பாக நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் 69 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியபோதும் அதற்கான எவ்வித நடவடிக்கையும் இதில் அறிவிக்கப்படவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் இது குறித்து ஆளுநர் உரையில்எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

- http://www.tmmk.in/