இஸ்லாமிய இயக்கத்தலைவர்களின் ஒன்று கூடல்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான கலந்தாலோசனை கூட்டம் 27.01.2012  மாலை சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, இஸ்லாமிய தொண்டு இயக்கம், வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா,
மறுமலர்ச்சி மு.லீக், ஆல் இந்திய இமாம் கவுன்சில், ஐக்கிய சமாதானப் பேரவை உள்ளிட்ட இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எத்துனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் ஒன்றினைந்து தீர்மானித்து மாநில அரசை வலியுறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து சமுதாய தலைவர்களையும் அழைத்து ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. 
இக்கூட்டத்திற்கு  அதன் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முஹம்மது காலித் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இடஒதுக்கீடு தொடர்பான விரிவான தொகுப்பை தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா வழங்கினார். சமூக தலைவர்கள் அனைவரும்  ஆலோசனை செய்து ஒத்த கருத்து ஏற்பட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் ஒன்று கூடிய இந்நிகழ்ச்சி சிறப்பானதாக அமைந்தது. இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி நன்றியுரை கூறினார்.