JAQH மாநிலமாநாடு

டைப்புகளைவிட்டும் படைத்தவனைநோக்கி’ …….என்ற தலைபப்பில் இன்ஷாஅல்லாஹ் ஜம்மிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் சார்பாக வரும் ஜனவரி 14,15(சனி,ஞாயிறு) ஆகிய தியதிகளில் கோவை மாநகரில் இரண்டுநாள் மாநில மாநாடு நடைபெறஇருக்கிறது.

இந்த மாநாட்டில் நாம் வணங்கவேண்டியது இறைவனால் படைக்கப்பட அவனது படைப்பினங்களையா?அல்லது நம்மைப்படைத்த இறைவனை மட்டுமா? என்ற கருப்பொருளை மையமாகவைத்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே கோவை மாநகரில் நடைபெறும் இந்த இரண்டுநாள் மாநாட்டில் நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தோடு கலந்துகொண்டு நமது இறைவன் யார் என்பதை அறிந்துகொள்ள வருமாறு அன்போடுஅழைக்கிறோம்.
அன்பார்ந்த எங்கள் மாற்று சமுதாய மக்களே! இது முஸ்லிம்களால் முஸ்லிம்களுக்காக மட்டும் நடத்தப்படுகின்ற மாநாடு என்று நீங்கள் நினைத்து பாராமுகமாக ஒதுங்கிவிடாமல் நாமெல்லாம் மனிதர்கள் நம்மைப்படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை புரிந்துவைத்திருக்கிற நாம் நமது இறைவன் யார் அவன் எப்படிஇருப்பான்?என்பதை நீங்களும் அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பினை இந்த மாநாட்டின் வாயிலாக நாங்கள் ஏற்பாடுசெய்துள்ளோம்.இங்கு உங்களின் சந்தேகங்களுக்கான தீர்வுகள் கிடைத்திட குடும்பத்தோடு வருகைதந்து தெளிவடைந்துகொள்ள அன்போடுஅழைக்கிறோம்!

                         இந்த இரண்டுநாள் மாநாட்டில் சிறப்பம்சங்கள்:
• வருகை தரும் அனைத்து மாற்று மத சகோதர சகோதரிகளுக்கும் இலவசமாக தமிழ் குர்ஆன்,இஸ்லாத்தை அறிந்துகொள்ளும் நூல்கள் வினியோகிக்கப்படும்.
• பிரபலமான வெளிநாட்டு,உள்நாட்டு மார்க்க அறிஞர்கள் பயனுள்ள பல தலைப்புகளில் உரை நிகழ்த்துவார்கள்.
• இரண்டுநாள் தங்குவதற்கான பாதுகாப்பான வசதி,சிறந்தஉணவு,குடிநீர்,கழிவறை,தொழுகை ஏற்பாடுகள்
• பெண்களுக்கும் இரண்டுநாள் தங்குவதற்கான பாதுகாப்பான வசதி,சிறந்தஉணவு,குடிநீர்,கழிவறை,தொழுகை ஏற்பாடுகள்
• அவசரதேவைக்கான மருத்துவவசதி,ஆம்புலன்ஸ் வசதி,தகவல் சேவை
                       இப்படிப்பட்ட சிறப்பு அம்சங்களை தாங்கி ”அல்லாஹ் என்றால் யார்’ என்பதை அறிமுகம் செய்து வைக்கப்படுகின்ற இந்த இரண்டுநாள் மாநில மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன்வல்ஹதீஸ் ஜமாஅத் அன்போடு அழைக்கிறது.