IFT புத்தக வெளியீடு- சென்னை புத்தகக் கண்காட்சி-35


சென்னையில் IFT புத்தக வெளியீடு 
சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சிராஜ் மஹாலில் 3.1.2012 அன்று மாலை 6.15 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இப்பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் 3 புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டது.
இறைவசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.  மாநிலத்தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹமத் அவர்கள் துவக்கவுரையாற்றினார்.  அவரைத் தொடர்ந்து டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் நவீன உலகத்தீன் சவால்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அதன் பிறகு IFT இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் 3 புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.  மெளலானா ஜலாலுத்தீன் உமரி அவர்களின் இரண்டு புத்தகங்கள் ‘விசாரணை நேரம்’ மற்றும் ‘நாட்டு நடப்பும் நாமும்’ என்ற இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இப்புத்தகங்களை உருதுவிலிருந்து ஜனாப் அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் அவர்கள் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்.
மெளலவி நூஹ் மஹ்ளரி அவர்கள் எழுதியுள்ள “கருத்து வேறுபாடு – அருளா? அழிவா?” என்ற மற்றுமொரு புத்தகம் வெளியிடப்பட்டது.

புத்தக வெளியீட்டை தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத்தலைவர் மெளலானா ஜலாலுத்தீன் உமரி அவர்களின் சிறப்புரை நடைபெற்றது.  அவரது உருது சொற்பொழிவை ஜனாப் அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் அவர்கள் தமிழில் மொழிப்பெயர்த்தார்.
நிகழ்ச்சியில் அகில இந்திய துணைத்தலைவர் மெளலானா ஜாஃபர், அகில இந்திய பொதுச் செயலாளர் மெளலானா நுஸ்ரத் அலி, அகில இந்திய செயலாளர்கள் மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் என 1000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை புத்தகக் கண்காட்சி - 35
சென்னையில் ஆண்டு தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு ஜனவரி 5-17 தேதிகளில் இரண்டு வாரங்களாக சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் அமைந்துள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேநிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
புத்தகக் கண்காட்சியில் 682 அரங்குகள் இடம் பிடித்துள்ளன; தமிழ், ஆங்கிலம் தெலுங்கு, இந்தி போன்ற இந்திய மொழி நூல்களும் பிரஞ்சு, ஆங்கிலம் போன்ற வெளிநாட்டு மொழிகளின் நூல்களும் விற்பனைக்குத் தயாராக இருக்கின்றன.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், பிற நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தக விற்பனைக்கு அரங்குகள் திறந்திருக்கும்.

புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ஓராளுக்கு 5 ரூபாய். 12 வயதுக்கும் குறைந்த சிறுவர்-சிறுமியருக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. இந்தக் கண்காட்சியில் வாங்கப்படும் நூல்களுக்கு அதன் சில்லறை விற்பனை விலையிலிருந்து 10 விழுக்காடு தள்ளுபடி உண்டு.
இறைமறை குர்ஆனின் விளக்கவுரையான தஃப்ஸீர் இபுனு கஸீர் மற்றும் நபிவழித் தொகுப்பு நூல்களின் தமிழ் வெளியீட்டாளர்களான ரஹ்மத் ட்ரஸ்ட் நிறுவனத்தினர் இந்தப் புத்தகக் கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ளனர்:
IFT நிறுவனமும் அரங்கு அமைத்து, நிறுவனத்தின் நூல்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. வாய்ப்பு உள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடைய வேண்டுகிறோம்.

தகவல் - jihtn.org 
              -satyamargam.com