இணையத்தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி :



https://www.tnebnet.org/awp/TNEB/

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின் கட்டணத்தை இன்டர்நெட் வழியாக செலுத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். முன்பு சென்னையில் மட்டுமே இருந்த இந்த வசதியை தற்போது தமிழகமெங்கும் விரிவு படுத்தியுள்ளனர். 

 மேற்கூறிய இணைய தளத்தில் தங்களின் மின் பகிர்மான என்னை பதிவு செய்து, வெளிநாடுகளில் வசிக்கும் ஆண்கள் தங்களின் வீட்டு மின்சார கட்டணத்தை இன்டர்நெட் வழியாக ஆன்லைனில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மூலம் கட்டலாம்.  இந்த இணையதள சேவைக் கட்டணமாக நாம் கட்டும் தொகையில் இருந்து 2.1345% சேர்த்து வசூல் செய்வார்கள். உதாரணத்திற்கு தங்களின் மின் கட்டணம் 1,000 ரூபாய் என்றால் நீங்கள் கூடுதலாக 21.35 ரூபாய் செலுத்தவேண்டும். மேலும் விபரங்களுக்கு https://www.tnebnet.org/awp/TNEB/ என்ற இணையத்திற்கு சென்று அறிந்து கொள்ளுங்கள்.

எல்லாம் சரிதான்! ஆனால் தமிழ்நாட்டில் கம்ப்யூட்டரை ஆண் செய்து இந்த இணையத்திற்கு சென்று பணம்கட்ட கரண்ட் இருக்குமா?. அது அந்த ஆற்காட்டு வீராசாமிக்கே“வெளிச்சம்”!.