யூதர்களிடம் ஹிட்லர் தீராத பகைக் கொண்டது போல் இஸ்லாமியர்களை பா.ஜனதா பகைவர்களாக பார்க்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திக்விஜய் சிங் கூறியதாவது:-
1930-ம் ஆண்டுகளில் நாசி கட்சியை கொண்டு ஹிட்லர் யூதர்களை முற்றிலுமாக அழிக்க நினைத்தார். அதேபோல் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இஸ்லாமியர்களை அடியோடு முடக்குவதை தனது சித்தாந்தமாக கொண்டுள்ளது என கூறினார்.
பா.ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி 1992-ம் ஆண்டு மேற்கொண்ட ''ரத யாத்திரை'' இந்து- முஸ்லீம்களிடையே பெரிய அளவில் முரண்பாட்டினை தூண்டியது.
இந்த ''ரத யாத்திரை'' இந்தியாவின் தீவிரவாதத்திற்கு ஆணிவேராக அமைந்தது. இந்திய வரலாற்றில் கறுப்பு சம்பவமாக பாபர் மசூதி இடிப்பு அமைந்தது.
எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகளாக இல்லை. எல்லா தீவிரவாதிகளும் முஸ்லீம்களாக உள்ளனர் என்று பா.ஜனதா குற்றம்சாட்டுகிறது. எல்லா இந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல. இந்து தீவிரவாதிகள் அனைவரும் பல்வேறு குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாக ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறலாம் என பா.ஜனதாவையும், ஆர்.எஸ்.எஸ்.யையும் கடுமையாக தாக்கி பேசினார்.
''சிஷூ மந்திர்'' பள்ளிகளின் மாணவர்களிடம் அவர்களின் மனதில் முஸ்லீம்கள் பகைவர்கள் என்ற தவறான கருத்தினை ஆர்.எஸ்.எஸ். விதைக்கிறது. மேலும், இந்தியா ராணுவம், காவல்துறைகளிடையே ஆர்.எஸ்.எஸ். தனது ஆதரவாளர்களை பெருக்கிவருகிறது.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா மற்றும் சில மாநில கட்சிகள், கம்யூனிஸ்ட்களால் நாட்டின் ஒற்றுமைக்கு மிகவும் சவாலாக உள்ளது என்றும் கூறினார்.
இஸ்லாமியர்கள் நமது சகோதரர்கள் என்ற கருத்தை காங்கிரஸ் எப்போதும் வலியுறுத்தும்.
இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.
MAALAI MALAR ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 19,