"இந்திய மக்களால் அதிகம் பேசப்படும் பிரச்னையாகவும், கவலைப்படும் பிரச்னையாகவும் ஊழல் தான் உருவெடுத்துள்ளது' என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
பி.பி.சி., வேர்ல்டு சர்வீஸ் நிறுவனத்துக்காக, குளோப்ஸ்கேன் என்ற ஆய்வு நிறுவனம், இந்தியா உட்பட 26 நாடுகளில் ஒரு ஆய்வை நடத்தியது. சர்வதேச அளவில் மக்கள் அதிகம் பேசும், கவலைப்படும் பிரச்னை எது என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஊழல், சுற்றுச் சூழல், பயங்கரவாதம், பொருளாதாரம், வறுமை, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை, முக்கிய பிரச்னையாக மக்கள் முன் வைக்கப்பட்டன.
ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவைப் பொறுத்தவரை ஊழல் தான் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. ஊழலைப் பற்றித் தான் பெரும்பாலான மக்கள் கவலைப்படுகின்றனர். சமீபகாலமாக, இந்தியாவில் நடந்து வரும் ஊழல் பிரச்னைகள் தான் இதற்கு காரணமாக உள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட 26 நாடுகளில், 21 நாடுகளைச் சேர்ந்த மக்கள், ஊழல் பிரச்னையையே வலியுறுத்துகின்றனர். சர்வதேச அளவில் 68 சதவீதம் பேர், ஊழலைப் பற்றித்தான் கவலைப்படுகின்றனர். சர்வதேச அளவில் அதிகம் பேசப்படும் பிரச்னையாக வறுமை உள்ளது. 69 சதவீத மக்கள், உலகில் நிகழும் வறுமை பற்றி கவலைப்படுகின்றனர். சுற்றுச் சூழல் குறித்து 64 சதவீத மக்களும், பயங்கரவாதம் குறித்து 61 சதவீதம் பேரும், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து 59 சதவீதம் பேரும் கவலைப்படுகின்றனர்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை பயங்கரவாதம் தான் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளதாக, அந்த நாட்டு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஊழலுக்கு அடுத்தபடியாக, இந்திய மக்களால் அதிகம் பேசப்படும் பிரச்னையாக பயங்கரவாதம் உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், பொருளாதார நிலை குறித்தும், ரஷ்ய மக்கள் வறுமை குறித்தும், சீன மக்கள் சுற்றுச் சூழல் நிலை குறித்தும் அதிகம் பேசுகின்றனர். வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள மக்களை பொறுத்தவரை, சுற்றுச் சூழல் குறித்து தான், அதிகம் கவலைப்படுகின்றனர். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.