இந்தோனேசியாவை தாக்கிய சுனாமியின் நேரடி வீடியோக்கள்.

அல்லாஹுவின் திருப்பெயரால்....,

எந்த நாளில் பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ- அதன் பின்னர் இன்னொரு பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ- அந்த நாளில் சில இதயங்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும்," அவர்களின் பார்வைகள் அச்சத்தால் கீழே தாழ்ந்து விட்டிருக்கும்,....,(திருக்குர்ஆன் 79: 6-9)


இந்தோனேசியாவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 8.9 எனப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி விரைந்தனர். அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் கட்டடங்களில் இருந்து வெளியேறி வீதியில் குழுமினர்.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக தமிழகத்திலும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 எனப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்து தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் கூடினர்.
சென்னையில் போரூர்,. ஆழ்வார்பேட்டை, அமிஞ்சிக்கரை, பூந்தமல்லி, அம்பத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடIங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது.
இதேபோல் ஊட்டி, குன்னூர், திருச்சி, நாகப்பட்டினம் உள்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
நிலநடுக்கத்தினால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.
எனினும் சில இடங்களில் தொலைத்தொடர்பில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வெறிச்சோடிய மெரினா கடற்கறை -

கடலில் ஏற்பட்ட இந்த கொந்தளிப்பை ஒரு சிலர் பயம் கலந்த ஆசையுடன் கடல் அருகே நெருங்கி வந்து கண்டு ரசித்தனர். இருப்பினும் வெகுண்டு எழுந்து சீறி வரும் அலையை கண்டு அவர்கள் பதறி அடித்து ஓடிச்சென்ற காட்சிகளையும் மெரினாவில் காண முடிந்தது. கணிக்க முடியாத அலையால் மெரினா கடற்கரை மணலில் சிறு கடை வைத்திருப்பவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அலை சிறிய கடைகளின் மீது மோதி, அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளை இழுத்து சென்றது. இதனால் பதறிய போன சிறு வியாபாரிகள் தங்கள் கடைகளை கடலில் இருந்து 100 அடிக்கு தள்ளி அமைத்தனர்.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரையில் ஆங்காங்கே படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நேரம் செல்ல செல்ல அலையின் சீற்றம் கடுமையாக இருந்ததால் மீனவர்கள் கடற்கரைக்கு வந்த பொது மக்களை கடல் அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.