இஸ்லாமிய வங்கி

பன்னாட்டு அளவில் குறிப்பாக மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ஆய்வு செய்து அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முனைப்பாக காரியம் ஆற்ற வேண்டும் எனப் பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

"வட்டிஇல்லா வங்கியான இஸ்லாமிய வங்கியியலை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல தரப்பிலும் கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை செயல்படுத்தும் விதமாக, மலேசிய வங்கிகளில் செயல்முறையில் உள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ய வேண்டும், என்று நான் ரிசர்வ் வங்கிக்குப் பரிந்துரை செய்கிறேன்" என்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கூறினார்.



மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து அறிய இந்தியா விரும்புகிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது மேற்கண்டவாறு பிரதமர் பதில் கூறினார்.