காதிமுல் ஹரமைன் ஃபவுண்டேஷன்


இஸ்லாமிய அழைப்பு பணி, பள்ளிவாசல்களையும் இஸ்லாமிய மையங்களையும் நிறுவுதல், உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் முன்னேற்றம், பல்வேறுபட்ட நாகரீகங்கள், மதங்கள் ஆகியவற்றைப் பின்பற்றுவோறிடையான அழகிய உரையாடல்களையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் அவர்களை தலைவராகவும் அவரது மகன் இளவரசர் காலித் பின் அப்துல்லாஹ்வைத் துணை தலைவராகவும் கொண்டு 'காதிமுல் ஹரமைன் சாரிட்டபிள் ஃபவுண்டேஷன்'  அமைக்கப்பட்டுள்ளது.


ஆய்வு, ஆராய்ச்சி, புத்தக வெளியீடு, அரபியிலிருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து அரபிக்கும் மொழி பெயர்த்தல், கல்வி நிறுவனங்களை அமைத்தல், சாந்தி சமாதானத்தையும் மிதவாதத்தையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், துயர் துடைப்புப் பணிகளை மேற்கொள்ளல் போன்ற மிக விரிவான தளங்களைக் கொண்ட செயல் திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மன்னர் அப்துல்லாஹ்வின் பெயரில் ஒரு பன்னாட்டு விருதும் ஏற்ப்படுத்தப்பட உள்ளது.
நன்றி: சமரசம்