விஞ்ஞான தொழில் நுட்பம் இஸ்லாத்திற்கு அச்சுறுத்தலா?
ஏ.சி. அகார் முஹம்மத்
இன்று நாம் காணும் அதிசயிக்கத்தக்க அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, தற்கால உலகை 'அறிவியல் யுகம்' என்று வர்ணிப்பர். கணனி (Computer), மின்அஞ்சல் (E-Mail), இணையம் (Internet) டிஜிட்டல் தொழில்நுட்பம் என தகவல் தொழில் நுட்பத்துறை பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி, உலகை ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாற்றியுள்ளது. உலகம் ஒரு பூகோளக் குடும்பமாக (Global Family) சுருங்கும் நாள் வெகு தொலை விலில்லை என நம்பப்படுகின்றது. மறு பக்கத்தில் அறிவியல் ஆராய்ச்சியின் உச்ச நிலையில் 'போலாக்கம்' (Cloning) எனும் செயற்பாடு உலகை பெரு வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்று நாம் காணும் அதிசயிக்கத்தக்க அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, தற்கால உலகை 'அறிவியல் யுகம்' என்று வர்ணிப்பர். கணனி (Computer), மின்அஞ்சல் (E-Mail), இணையம் (Internet) டிஜிட்டல் தொழில்நுட்பம் என தகவல் தொழில் நுட்பத்துறை பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி, உலகை ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாற்றியுள்ளது. உலகம் ஒரு பூகோளக் குடும்பமாக (Global Family) சுருங்கும் நாள் வெகு தொலை விலில்லை என நம்பப்படுகின்றது. மறு பக்கத்தில் அறிவியல் ஆராய்ச்சியின் உச்ச நிலையில் 'போலாக்கம்' (Cloning) எனும் செயற்பாடு உலகை பெரு வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Posted by
islamvision
இஸ்லாமிய வங்கி
பன்னாட்டு அளவில் குறிப்பாக மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ஆய்வு செய்து அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முனைப்பாக காரியம் ஆற்ற வேண்டும் எனப் பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
"வட்டிஇல்லா வங்கியான இஸ்லாமிய வங்கியியலை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல தரப்பிலும் கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை செயல்படுத்தும் விதமாக, மலேசிய வங்கிகளில் செயல்முறையில் உள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ய வேண்டும், என்று நான் ரிசர்வ் வங்கிக்குப் பரிந்துரை செய்கிறேன்" என்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கூறினார்.
"வட்டிஇல்லா வங்கியான இஸ்லாமிய வங்கியியலை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல தரப்பிலும் கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை செயல்படுத்தும் விதமாக, மலேசிய வங்கிகளில் செயல்முறையில் உள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ய வேண்டும், என்று நான் ரிசர்வ் வங்கிக்குப் பரிந்துரை செய்கிறேன்" என்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கூறினார்.
Posted by
islamvision
காய்கறிகள்,பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது.
இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில், அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதால், காய்கறிகள் மற்றும் பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில், தடை செய்யப்பட்ட ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, டில்லியில் உள்ள "நுகர்வோர் குரல்' என்ற தன்னார்வ அமைப்பு டில்லி, பெங்களூரு மற்றும் கோல்கட்டா ஆகிய நகரங்களில் உள்ள சில்லறை மற்றும் மொத்த காய்கறி கடைகளில் விற்கப்படும் காய்கறிகளை ஆய்வு செய்தது.இதில், ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், இந்தியாவில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிக விஷத்தன்மை கொண்டதாக மாறிவருவது தெரியவந்துள்ளது
Posted by
islamvision
+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ரூ.1,000
2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010-ல் பட்ட படிப்பு (BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது (முதுகலை (Master Degree) படிக்கும் போது மாதம் ரூ.2,000 வழங்கப்படும்). 2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது. இது 2010-ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே. இந்த உதவி தொகை. தமிழகத்தில் மொத்தம் 4883 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4,50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
Posted by
islamvision
பள்ளி சீருடைகளை மாற்ற வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளுடைய
இந்த இந்த பாகங்களைத் தவிர மற்றவை வெளியே தெரிவது நல்லதல்ல எனக்கூறி அவர்களின் முகத்தையும், மணிக்கட்டு வரையிலான கைகளையும் சுட்டிக் காட்டினார்கள். - (அபு தாவூத்)
Posted by
islamvision
காதிமுல் ஹரமைன் ஃபவுண்டேஷன்

ஆய்வு, ஆராய்ச்சி, புத்தக வெளியீடு, அரபியிலிருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து அரபிக்கும் மொழி பெயர்த்தல், கல்வி நிறுவனங்களை அமைத்தல், சாந்தி சமாதானத்தையும் மிதவாதத்தையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், துயர் துடைப்புப் பணிகளை மேற்கொள்ளல் போன்ற மிக விரிவான தளங்களைக் கொண்ட செயல் திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மன்னர் அப்துல்லாஹ்வின் பெயரில் ஒரு பன்னாட்டு விருதும் ஏற்ப்படுத்தப்பட உள்ளது.
நன்றி: சமரசம்
Posted by
islamvision
இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: துல்ஹஜ்
மாதத்தின் சிறப்பு:
முக்கிய நிகழ்வுகள்
தகவல் : http://mudukulathur.com/
நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் மற்ற நாட்களில் செய்யப்படும் நற்செயல்களை விட அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானதாகும். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வதையும் விடவுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆம்! என்றாலும் அல்லாஹ்வின் பாதையில் தம் உயிர், பொருளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்ற பின்னர், அதில் எதனையும் திருப்பிக் கொண்டு வரவில்லையோ அவரின் நற்செயலைத்தவிர! என்று கூறினார்கள். (புகாரி)
துல்ஹஜ் பிறை 9 ஆம் நாள் அரஃபா நாளாகும். அபூகதாதா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அரஃபா நாள் நோன்பு பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது: அதற்கவர்கள் அன்று நோன்பு வைப்பது, முந்திய ஓராண்டு பாவங்களையும் அழித்து விடுகிறது என்று கூறினார்கள். (முஸ்லிம்)
துல்ஹஜ் பிறை 10 ஆம் நாள் ஹஜ்ஜுப் பெருநாள். குர்பானி கடமையானவர்கள் அதை நிறைவேற்றுதல் அவசியம். பெருநாள் தொழுகையை நிறைவேற்றியதிலிருந்து துல்ஹஜ் பிறை 13 ஆம் நாள் வரை குர்பானி கொடுக்கலாம்.
முக்கிய நிகழ்வுகள்
நபி(ஸல்) அவர்களின் ஹஜ்:
ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு நபி(ஸல்) அவர்கள் இறுதிக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றியவர்களாக, மக்களுக்கு ஹஜ்ஜின் வழி முறைகளையும் மார்க்க சட்ட திட்டங்களையும் கற்றுக்கொடுத்தார்கள். ஹஜ்ஜின் போது அவர்கள் மக்களுக்கு செய்த உபதேசங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவையாகும்.
இரண்டாவது அகபா ஒப்பந்தம்:
நபித்துவத்தின் 13-வது ஆண்டு துல்ஹஜ் மாதத்தில் ஹஜ்ஜுக்காக மதீனாவிலிருந்து 73 நபர்கள் முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் வந்தார்கள். அவர்களுடன் நுஸைபா பின்த் கஅப் உம்முஅம்மாரா, அஸ்மா பின்த் அம்ரு இப்னு அதீ ஆகிய இரு பெண்களும் வந்திருந்தார்கள்.
முன்பு, சென்ற ஆண்டு (நபித்துவத்தின் 12-வது ஆண்டு) ஒப்பந்தம் நடந்த ”அகபா” என்ற அதே இடத்தில் மதீனாவாசிகள் கூடியிருந்தனர். நபியவர்களின் உபதேசத்திற்குப்பின், மதீனாவாசிகள் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவதாகவும், எத்தகைய சூழ்நிலையிலும் இஸ்லாத்திற்காக தங்களின் உயிர், பொருள், உடமைகளை தியாகம் செய்யத்தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்கள். மேலும் நபி(ஸல்) அவர்களை மதீனா வர அழைப்பு விடுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மதீனாவாசிகளில் 12-நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மற்றவர்களுக்கு பொறுப்பாளர்களாக நியமித்தார்கள். இவர்களில் கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்த 9-பேரும், அவ்ஸ் கிளையைச் சேர்ந்த 3-பேரும் இருந்தார்கள்.
சவீக் யுத்தம்:
பத்ரு யுத்தத்தில் மக்கத்து குரைஷிகள் தோல்வியடைந்து, அவர்களில் பெரும் தலைவர்களில் சிலர் கொல்லப்பட்டு விட்டனர். அடுத்த தலைவராக பொறுப்பேற்ற அபூசுஃப்யான், இதற்கு முஸ்லிம்களை பழிவாங்காமல் நான் குளிப்பதில்லை தலைக்கு எண்ணெய் இட்டுக் கொள்வதில்லை என சத்தியம் செய்து கொண்டார். தனது சத்தியத்தை நிறைவேற்ற 200 ஒட்டகைப் படையோடு மதீனா வந்து, நள்ளிரவில் முஸ்லிகளின் இல்லங்களைத் தாக்கி சேதப்படுத்தியதோடு அன்சாரிகளில் ஒருவரை கொலை செய்தும் விட்டனர்.
இதன் விபரம் முஸ்லிம்களுக்குத் தெரிந்ததும் அவர்களைத் தாக்கப் புறப்பட்டார்கள். முஸ்லிம்களின் படை வருவதையறிந்த அபூசுஃப்யான் தனது படைகளோடு திரும்பி ஒட ஆரம்பித்தார். அப்படி ஓடும்போது அவர்கள் உணவுப் பொருளாக எடுத்து வந்த ’சவீக்’ என்னும் சத்துமாவு மூட்டைகளை பதற்றத்தில் விட்டு விட்டு ஓடினர். எதிரிகள் தப்பிச் சென்று விட்டதால் அவர்கள்i விட்டுச் சென்ற மாவு மூட்டைகளை முஸ்லிம்கள் கைப்பற்றிக் கொண்டனர். இதனால் இதற்கு “சவீக் யுத்தம்” என்று பெயர் வந்தது. இந்நிகழ்வு ஹிஜ்ரி 2, துல்ஹஜ் மாதத்தில் நிகழ்ந்தது.
அபூபக்கர்(ரழி) அவர்களின் ஹஜ்:
நபி(ஸல்) அவர்களுக்கு பின் முதல் கலீஃபாவாக பெறுப்பேற்றுக் கொண்ட அபூபக்கர்(ரழி) அவர்கள் ஹிஜ்ரி 12-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவு செய்தார்கள்.
உமர்(ரழி) அவர்களின் வீர்மரணம்:
ஹிஜ்ரி 23, துல்ஹஜ் 25-ஆம் நாள் புதன் கிழமை காலை இரண்டாம் கலீஃபா அமீருல் முஃமினீன் உமர்(ரழி) அவர்களை, அபூலுஃலூ அல்ஹபஷி என்பவன் கத்தியால் குத்தினான். இதனால் ஷஹீத் (வீரமரணம்) அடைந்தார்கள். அப்போது அன்னாரின் வயது 60 ஆகும். அவர்களின் சிறப்பான ஆட்சிக்காலம் 10 ஆண்டுகள், 6 மாதங்கள், 5 நாட்கள் ஆகும்.
உஸ்மான்(ரழி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்படுதல்:
உமர்(ரழி) அவர்கள் தங்களின் மரண நேரத்தில், பெரும் சஹாபாக்களில் சிலரைக் கொண்டு ஆலோசனக் குழு அமைத்து அடுத்த கலீஃபாவைத் தேர்ந்தெடுக்கக் கூறினார்கள். அக்குழுவில் அலி இப்னு அபூதாலிப்(ரழி), உஸ்மான் இப்னு அஃப்பான்(ரழி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்(ரழி), ஜுபைர் இப்னு அல்அவாம்(ரழி), அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரழி) ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள். இக்குழுவினர் துல்ஹஜ் மாத இறுதியில் உஸ்மான் (ரழி) அவர்களை 3-வது கலீஃபாவாக தேர்ந்தெடுத்தார்கள்.
தொகுப்பு: மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி (துபாய்)
குர்பானியின் சிறப்புகள்
Posted by
islamvision
குர்பானியின் சிறப்புகள்
(மேலும்), ஒவ்வொரு சமூகத்தாருக்கும் பலியிடும் ஒரு நெறிமுறையை நாம் வகுத்துக் கொடுத்துள்ளோம்- அந்த(ந்தச் சமூக)௦ மக்கள்-அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள கால்நடைகளின் மீது அல்லாஹுவின் பெயரை உச்சரி(த்து அறு)க்க வேண்டும் என்பதற்காக! (பல்வேறுபட்ட இவ்வழிமுறைகளின் நோக்கம் ஒன்றுதான்:) எனவே, உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்! அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள், மேலும் (நபியே!) பணிவான நடத்தையை மேற்க்கொள்வோர்க்கு நீர் நற்செய்தி அறிவிப்பீராக!
-(திருக்குர்ஆன் 22:34)
அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச்சேருகின்றது. இவ்வாறு அவனே அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்: அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியமைக்காக நீங்கள் அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக! (நபியே!) நற்பணி புரிவோருக்கு நற்செய்தி சொல்வீராக!
-(திருக்குர்ஆன் 22:37)
ஒருவர் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை அவர் தனது முடியை, நகத்தை வெட்டவேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 3655, நஸயீ 4285
-(திருக்குர்ஆன் 22:37)
ஒருவர் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை அவர் தனது முடியை, நகத்தை வெட்டவேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 3655, நஸயீ 4285
நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியை பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனுடைய இறைச்சி, தோல் ஆகியவற்றை எல்லாம் வினியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை அறுத்து, உரித்து பங்கிடக் கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ, தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளையிட் டார்கள்.
நூல்: புஹாரி 1717
(குர்பானி இறைச்சியிலிருந்து) உண்ணுங்கள், சேமித்துக்கொள்ளுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Posted by
islamvision
புற்றுநோயோடு போராடும் ஐந்து வயது பிஞ்சுக்கு உதவி செய்யுங்கள்.

பள்ளியில் சக மாணவர்களுடனுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கையில் இவனால் மட்டும் திடீரென முடியாமல் போனது. காரணம் அறிய மருத்துவரை நாடி பரிசோதனைகளை மேற்கொண்டபோதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் வெளியானது. சிறுவன் அபூபக்கரின் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் கட்டி (கேன்சர்) வளர்ந்து கொண்டு இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும்.......,.
Posted by
islamvision
அரபு நாடுகளின் சட்டத்தை பயன்படுத்த இந்திய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்

குழந்தைகளை கடத்துபவர்கள், கொலை செய்பவர்களை தண்டிக்க, அரபு நாடுகளின் சட்டத்தை பயன்படுத்த இந்திய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்,'' என பெண் வக்கீல்கள் சங்க செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை பெண் வக்கீல்கள் நலச்சங்க செயலாளர் வெண்ணிலா விடுத்துள்ள அறிக்கை: கோவையில் பள்ளி சிறுவன், சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்துள்ளது. ஏதுமறியாத இளந்தளிர்களை கிள்ளி எறிந்த மனித மிருகங்களின் செயலால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மனதால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமுதாயத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொடியவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். "ராகிங்' குற்றத்துக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரப்பட்டது போல், குழந்தைகளை பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். இதுபோன்ற குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து, ஒரு ஆண்டுக்குள் விசாரணையை முடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அளிக்கப்படும் தண்டனையால், கொடூரர்கள் மனதில் தண்டனை பற்றிய பயம் ஏற்படும். குற்றங்கள் குறையும். குறிப்பாக, குழந்தைகளை கடத்துபவர்கள், கொலை செய்பவர்களை அரபு நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகள் போல் இருக்க வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் கால்டாக்ஸி, வேன்களின் கண்ணாடி ஒட்டப்பட்டுள்ள கருப்பு நிறத்தை அகற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பப் பள்ளியில் இருந்தே குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தைகளை பெற்றோரே அழைத்துச் செல்லும் வகையில் அவர்களின் கருத்து கேட்கப்பட வேண்டும். இதற்கேற்ப பள்ளி அலுவல் நேரத்தில் திருத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்களின் வழித்தடத்தை காவல்துறை அலுவலகங்களுடன் தொழில் நுட்ப ரீதியில் இணைக்கப்பட வேண்டும். வழக்கமாக குழந்தைகளை அழைத்துச்செல்லும் ஆட்டோ, வேன் மற்றும் கால்டாக்ஸிகளில் கேமரா பொறுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


நன்றி -தினமலர்
Posted by
islamvision
Subscribe to:
Posts (Atom)