விஜய்யின் படம் துப்பாக்கி என்றால் கமலின் படம் பீரங்கி !


விஸ்வரூபம் திரைப்படம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்! இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு கோரிக்கை

குரான் வைத்திருப்பவர்கள் தீவிரவாதிகள், தொழுபவர்கள் தீவிரவாதிகள், முஸ்லிம்கள் இரக்கமில்லாதவர்கள், அன்பில்லாதவர்கள், என்றெல்லாம் விஸ்வரூபம் படத்தில் சித்தரிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் தமிழ் பேசக்கூடிய ஜிஹாதிகளுக்கு கோவையிலும் மதுரையிலும் பயிற்சி கொடுத்தார்கள், போன்ற விஷ கருத்துக்களை கமலஹாசன் தன் விஷ்வரூபம் படத்தில் விதைக்கிறார்,

இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பினர் காவல் துறை உயர் அதிகாரிகளை சந்திப்பிற்க்கு பிறகு நாளை உள்துறை செயலாளரை சந்திக்க உள்ளார்கள். அதன் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், சென்ஸார்டு போர்டு அனுமதி கொடுத்ததை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது விஜய்யின் படம் துப்பாக்கி என்றால் கமலின் படம் பீரங்கி! விஸ்வரூபம் திரைப்படம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்,

ஒற்றுமை எப்போதும் நல்ல பலனைத் தரும். சமீப காலங்களில் தமிழக முஸ்லிம் அமைப்புகள் சமூகத்தின் பொதுவான பிரச்சனைகளில் இணைந்து குரல் கொடுப்பது நல்ல ஒரு மாற்றம். சமூக நலனை முன்னிறுத்தி இணைந்துள்ள கரங்களின் இணைவு என்றென்றும் தொடரட்டும். இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பின் ஒன்றுபட்ட ஒற்றுமையான முயற்சி வலுபெறட்டும்.

தெரிந்தோ அல்லது அறியாமையின் காரணமாகவோ "விஸ்வரூபங்கள்" விதைக்க நினைக்கிற விஷ விதைகள் வெறும் புஸ்வானமாக போகட்டும். இறைவன் அருள் புரிவானாக..