D4 மீடியா ஒரு புதிய எதிர்பார்ப்பு.

         டிஜிட்டல் மீடியாவின் பல்வேறு பிரிவுகளுக்குள் கடந்துச் சென்று இஸ்லாமிய பணிகளில் இன்டர்நெட், டிஜிட்டல் மீடியா ஆகியவைகளின் தேவைகளை முடிந்த அளவு உபயோகப்படுத்துவதற்குரிய தீவிர முயற்சி, அது தான் d4media                 (DHARMA DHAARA DIVISION FOR DIGITAL MEDIA).  
                   மீடியாவின் செயல்பாடுகளுக்காக நவீன வசதிகள் கொண்ட அமைப்புடன் ஆடியோ, வீடியோ ஸ்டுடியோவிற்கென ஜமாஅத்தே  இஸ்லாமி ஹிந்தின் கேரள தலைமையகமான ஹிரா சென்டரில் முழுவதும் கம்ப்யூட்டர் வசதி கொண்ட அலுவலகம் அமைக்கப்பட்டது.
 பல்வேறு துறைகளில் திறமைவாய்ந்த 20 பேர் செயல்படுவர். நவீன அறிவியல் தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி காலகட்டத்தின் மொழியில் சமூக மக்களுக்கு இஸ்லாத்தின் செய்தியை கொண்டு சேர்ப்பது தான் D4 மீடியாவின் முக்கிய குறிக்கோள். 

                   நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் புதிய சூழலில் பல்வேறு இடங்களுக்கு பணிகளை விரிவு படுத்த வேண்டியுள்ளது. எதற்கெடுத்தாலும் இண்டர்நெட்டை சார்ந்து இருக்கின்ற ஒரு தலைமுறை வளர்ந்துகொண்டிருப்பதை நாம் காணுகிறோம். இதனாலேயே டிஜிட்டல், இன்டர்நெட் ஆகிய துறைகளில் அதிகமான சேவை தேவைப்படுகிறது. பரந்து விரிந்த ஆன் லைன் நியூஸ் போர்ட்டலுக்கு இது உருவம் அளிக்கிறது.
                 இஸ்லாத்தோடு தொடர்பு கொண்டு உலக அளவில் நடந்து கொண்டிருக்கின்ற அசைவுகளையும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் அதன் நிகழ்விடத்திலிருந்து  எடுத்துக் கொண்டு போர்ட்டலில் கொண்டு வந்து சேர்ப்பிப்பதோடு கட்சி பாகுபாடின்றி முடிந்த அளவு உள்ளூர் செய்திகளையும் இந்த நியூஸ் போர்ட்டலில் பிரசுரிக்கிறது. உலக இஸ்லாமிய நிகழ்வுகளை கண்காணித்து கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு முழுமையான இன்டர்நெட் reference கிடைக்கவும் போர்ட்டல் உதவுகிறது. தகவல் பரிமாற்றம் புத்தகங்களில் டவுன்லோடிங்,  வீடியோ, ஆடியோ டவுன்லோடிங் போன்ற பல சேவைகளையும் நியூஸ் போர்ட்டலில் கிடைக்கும்.
               பரவலாக C.D, DVD நிகழ்ச்சியின் தயாரிப்பு தான்  இதன் இன்னொரு சேவை. இதன் மூலம் சிறந்த நிகழ்ச்சிகள் குறைந்த விலையில் மக்களுக்குத் தர முடியும். 
                  கேரளா ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் துணைத் தலைவர் ஷைக் முஹம்மது காரக்குன்னு அவர்களின் தலைமையில் செயல்படும் இத்திட்டத்தை ஜனவரி 31 அன்று ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கேரளா மாநில அமீர் ஜனாப். T ஆரிப் அலி அவர்கள் துவங்கி வைத்தார்.
செய்தி: P.A.சையத் முஹம்மது , கோவை.