கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ். ஐ. ஒ) சார்பில் 4. 3.2011  வெள்ளி அன்று கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. லிபியா நாட்டு அதிபர் கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிராக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் sio  தமிழக மக்கள் தொடர்பு செயலாளர் சகோ. ஷபீர் அலி மற்றும் sio தமிழக முன்னாள் தலைவர் சலீம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர தலைவர் ஜனாப். சையத் இப்ராஹீம் வாழ்த்துரை வழங்கினார். 
இந்த கண்டன ஆர்ப்பாட்ட உரையில், " அனைவரும் அமைதியாக வாழ வேண்டும் என்பதே  நம் ஆசை.  ஆனால் இன்று பல நாடுகளிலும் புரட்சி வெடித்துள்ளது. குறிப்பாக லிபியாவில் அந்நாட்டு அதிபர் கடாபிக்கு எதிராக  கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் 40 ஆண்டுகளாக பதவியில் இருந்தும் இனியும் பதவி ஆசை மாறாததுதான். இதனுடைய உச்சக்கட்டமாக தன் நாட்டு மக்களை கூலிப்படை ஆட்களை கொண்டு கொன்று வருகிறார் கடாபி. சர்வாதிகாரத்தை விரும்பாத மக்கள் கடாபிக்கு எதிராக செயல்படுவதைப் பொறுக்க முடியாத கடாபி, 'உங்களை நான் ஆள்வேன்; இல்லையேல் நான் கொல்வேன்' என்று கூறியிருப்பது அதிர்ச்சித் தரக்கூடியதாகும். இந்த சர்வாதிகாரம் ஒடுக்கப்பட வேண்டியதாகும். 

அதுமட்டுமல்லாமல் சமாதானம் பேசுகிறேன் பேர்வழி என்று அமெரிக்க இதில் தலை இடுகிறது. தன்னை உலக போலீஸ்காரன் என நினைத்துக்கொண்டு செயல்படும் அமெரிக்காவின் முக்கிய எண்ணம் ஆயுதங்களை விற்பதுதான். அதுமட்டுமல்ல, ஏற்கனவே கடாபி மீதுள்ள பகையும் காரணம். இதே நிலைதான் இராக்கிலும் ஏற்பட்டது. சதாம ஹுசைனுக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டபோது தலையிட்ட அமெரிக்க தன இராணுவத்தை அங்கே அனுப்பி ஈராக்கையே  சின்னாபின்னமாக்கியது  நாம் அறிந்ததே. எனவே லிபியா நாட்டு மக்கள் ஜனநாயக ஆட்சி பெறவும் நாங்கள் வலியுறுத்துகிறோம. இதுபோன்றே, எகிப்து மற்றும் துனிசியா நாட்டு மக்களுக்கு sio வின் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும்  , சஹாபாக்களும் நமக்கு நல்ல முன்மாதிரி தலைவர்கள், ஆட்சியாளர்கள். மக்களோடு மக்களாக வாழ்ந்தனர். மக்களின் குறைகளை கேட்டு அறிந்தனர். அனைவருக்காகவும் வருந்தினர். அதனால்தான் காந்தி தன் உரையில் குறிப்பிட்டார்' . அபூபக்கரை போல், உமரைப் போல் ஆட்சியாளர்கள் வந்தால் இந்தியா வல்லரசாகும். லிபியா மட்டுமல்ல, இப்படிப்பட்ட சர்வாதிகாரம் எங்கு நடந்தாலும் sio அதற்காக குரல் கொடுக்கும்.  

தகவல்: அபூ ஷதீத்