குறும்படம் மற்றும் ஆவணப்படம்


இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) தமிழக மண்டலம் சார்பாக "இந்தியாவில் கல்வி" என்கிற தலைப்பில் "குறும்படம் மற்றும் ஆவணப்படம்"  (Short Films & Documentaries) தயாரிப்பதற்கான போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.  இளைய சமூகத்தின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் கல்வி, மற்றும் அதற்கான சூழல் குறித்த தங்கள் குறும்படங்களுடன் மாணவர்களும் இளைஞர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.


"எந்த கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் இதில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.   


குறும்படங்களுக்கான கால அளவு 8 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும். 

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக உங்கள் பெயரை 15-03-2011 முதல் 15-04-2011 வரை பதிவு செய்து கொள்ளலாம்.உங்கள் பெயர் மற்றும் தொடர்பு கொள்வதற்கான விபரங்களை மின்னஞ்சல் அல்லது கடிதம் மூலம் அனுப்பி உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். 

2011 ஏப்ரல் 30 ஆம்  தேதிக்கு முன்பாக உங்கள் குறும்படங்களை SIOவிற்கு வந்து சேருமாறு அனுப்பி வைக்க SIO வேண்டுகிறது.

நடுவர்குழுவால் வெற்றிப் படங்கள் தேர்வு செய்யப்படும். தேர்ந்து எடுக்கப்படும் முதல் மூன்று ஆக்கங்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.  இன்ஷா அல்லாஹ்,  இந்தப் படங்கள் பின்னர் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) தமிழக மண்டல குறும்பட விழாவில் திரையிடப்படும்.



மேலும் விவரங்களுக்கு:
SIO குறும்பட போட்டி, 
கலாச்சார பேரவை,
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) தமிழக மண்டலம்,
6/5,முதல் தளம் , இருசப்பன் தெரு,பெரிய மேடு, சென்னை-3.
என்ற முகவரியில் அணுகலாம். 

Phone: 044- 2561 2389   , +91 7305 65 7305
அல்லது

CulturalForum@SIOtamilnadu.org

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்."

விதிமுறைகள் , வழிகாட்டுதல்கள் மற்றும் மேலும் விரிவான விவரங்களுக்கு...