ம ம க, போட்டியிட்ட 600 இடங்களில் 110ல் வெற்றி

உள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி சுமார் 600 இடங்களில் தனித்துப்  போட்டியிட்டது. இதில் கோவை மாநகராட்சியில் 86வது வார்டிலும், 15 நகராட்சி வார்டுகளிலும், 37 பேரூராட்சி வார்டுகளிலும், 36க்கும் மேற்பட்ட ஊராட்சி வார்டுகளிலும்மனிதநேய மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கோவை மாநகராட்சி 86வது வார்டில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஏ. சாதிக் அலி 260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

ராமேஸ்வரம், கீழக்கரை, நெல்லிக்குப்பம், கடையநல்லூர், தென்காசி, வாணியம்பாடி, திருவாரூர், கூத்தாநல்லூர், வந்தவாசி முதலிய நகராட்சிகளுக்குட்பட்ட வார்டுகளில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இதேபோல் உடன்குடி, சோழபுரம்,, அபிராமம், பெருந்துறை, கயத்தாறு, தக்கலை, லால்பேட்டை, நெல்லை ஏர்வாடி, இளையான்குடி, நெல்லிக்குப்பம், திருக்கழுக்குன்றம், முதுகளத்தூர் முதலிய பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளார்கள்.

இதுவரை மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜாகிர் ஹீசைன்  ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் ஊராட்சிமன்றத் தலைவராகவும், நெல்லை மாவட்டம்வீரசமுத்திரம் ஊராட்சிமன்றத் தலைவராக நாகூர் கனியும் மற்றும் காஞ்சி மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சிமன்றத் தலைவராக வெங்கடேசனும் சிவகங்கை மாவட்டம் சாத்தனி ஊராட்சிமன்றத் தலைவராக சோபிதா சிராஜிதீன் வெற்றி பெற்றுள்ளார்கள்.

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட சுமார் 600 இடங்களில் இதுவரை கிடைத்த தகவலின் படி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் சுமார் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள். இதுதவிர 16 இடங்களில் ஏற்கனவே போட்டியின்றி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

(எம். தமிமுன் அன்சாரி)