ஜமாஅத்தே இஸ்லாமி - உறுப்பினர்கள் முகாம்


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழக உறுப்பினர்களின் இரு நாள் பயிற்சி முகாம் ஜனவரி 29,30 ஆகிய தேதிகளில் வாணியம்பாடியில் நடைபெற்றது.  முதல் நாள் காலை சரியாக 10 மணிக்கு நிகழ்ச்சி ஆரமபமானது.  ஜ.இ.ஹி. மதுரை தலைவர் மெளலவி. மொஹ்யித்தின் குட்டி உமரி அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரையாற்றினார்கள்.  அவரை தொடர்ந்து ஜ.இ.ஹி-ன் தமிழ் மாநில துணைத்தலைவர் அவர்களின் முகாமிற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.  ஜ.இ.ஹி-ன் மாநில தலைவர் அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்.


2007 – 2011 ஆண்டிற்கான மாநில அளவிலான பணிகளின் செயல் அறிக்கையை மாநிலச் செயலாளர் ஜனாப். நஸீருல்லாஹ் அவர்கள் சமர்பித்தார்கள்.  பிறகு ஜ.இ.ஹி-ன் அகில இந்திய பொதுச் செயலாளர் மெளலானா நுஸ்ரத் அலி அவர்கள் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.  உருதுவில் இருந்த உரையை சகோ.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தார்.  பிறகு தமிழக SIO – வின் 2009-2010 ஆம் ஆண்டிற்கான பணிகளை SIO-வின் முன்னாள் மாநிலத் தலைவர் சகோ. அஸ்ஹர் வஹீத் விளக்கினார்.  இந்த அமர்வை மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜனாப். P. முஹம்மத் யூசுப் அவர்கள் வழிநடத்தினார்.  ஜ.இ.ஹி-ன் முன்னாள் தலைவர்கள் ஜனாப்.ஏஜாஸ் அஸ்லம் மற்றும் ஜனாப்.H.அப்துர் ரகீப் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

லுஹர் & உணவு இடைவேளைக்கு பிறகு மதிய அமர்வு தொடங்கியது.

மெளலவி ஜமாலுத்தீன் உமரி அவர்கள் ஹதீஸ் தஸ்கீர் வழங்கினார்.  அவரை தொடர்ந்து இதாஅத் – ஓர் இஸ்லாமிய அணுகல் என்ற தலைப்பில் மாநில துணைத்தலைவர் மெள.ஹனிஃபா மன்பஈ அவர்கள் உரையாற்றினார்.  பிறகு வேலூர் மாவட்ட அமைப்பாளர் ஜனாப்.V.அதீகுர் ரஹ்மான் அவர்கள் ஜமாஅத்-குறிக்கோள்-செயல்திட்டம் ஒரு பகுப்பாய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார். மதிய அமர்வை மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் N.ஜான் முஹம்மத் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

அஸர் மற்றும் மஃக்ரிப்பிற்கு பிறகு நிகழ்ச்சி தொடங்கியது.

மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் K.ஜலாலுதீன் அமைப்புச் சட்டம் பிரிவு 15க்கு விளக்கம் கொடுத்தார்.  பிறகு மத்திய பிரதிநிதி சபை மற்றும் ஆலோசனைக் குழு தேர்வு முறை பற்றிய விளக்கம் நடைபெற்றது.  தேர்வு முறைகள் மறுநாள் மதியம் வரை நடைபெற்றது.                                     பிறகு புதிதாக உறுப்பினரான 4 நபர்கள் சகோ.I.ஜலாலுதீன், சகோ.யூசுஃப், சகோ.ஃபசீஹ் அக்ரம் மற்றும் சகோதரி ஆலியா நிக்கத் ஆகியோர் உறுதி பிரமானம் எடுத்தனர். மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் I.கரீமுல்லாஹ் தொகுத்து வழங்கினார்.

30.1.2010 ஞாயிறு மதியம் 2 மணிக்கு இறுதி அமர்வு ஆரம்பமானது. மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜனாப். சையத் அஹ்மத் ஹுசைனி வழிநடத்தினார்.  2 மணி நேரத்திற்கு மேலாக கேள்வி பதில் நிகழ்வு மற்றும் மாநில பணிக்களுக்கான ஆலோசனைகளில் உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக பங்கேற்றனர்.

நிறைவாக மாநிலத் தலைவர் ஜனாப்.  சப்பீர் அஹ்மத் அவர்களின் உரையுடன் முகாம் நிறைவு பெற்றது.  22 பெண் உறுப்பினர்கள் உள்பட 108 உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்

http://www.jihtn.org/