
ஐவேளை தொழுகையை கற்றுத் தந்த இஸ்லாம் , நோன்பு நோற்க சொன்ன இஸ்லாம், இன்ன பிற கடமைகளை நிறைவேற்ற சொன்ன இஸ்லாம் மக்களிடையே நடந்து கொள்ளும் முறையையும், கையாளக்கூடிய விதத்தையும் சொல்லாமல் விட்டிருக்குமா? இஸ்லாம் சிறு சிறு விஷயங்களைக் கூட சொல்லாமல் விட்டுவிடவில்லை. சிரிப்பதும் சிந்திப்பதும், உண்ணுவதும், உறங்குவதும் என்று வாழ்க்கையினுடைய எல்லா அம்சங்களிலும் வழிகாட்டுகிறது.