முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி மிகப்பெரிய புத்தகம் :


            முஹம்மது நபியின் (ஸல்) வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய புத்தகமொன்று உலகை சுற்றி வர தயாராக உள்ளது. கின்னஸ் வேல்டு ரெகார்டு அங்கீகாரத்துடன் "உலகத்திலேயே மிகப்பெரிய புத்தகம்" என்ற புகழுடன் இது உலகம் முழுவதும் உலா வருகிறது.


குவைத்திலிருந்து தொடங்குகின்ற சுற்றுப் பயணத்திற்குப் பிறகு இப்புத்தகம் அபுதாபியில் உள்ள ஷைக் சாயித் கிராண்டு பள்ளிவாசலில் நிரந்தரமாக பார்வைக்கு வைக்கப்படும்.


          திஸ் இஸ் முஹம்மத் என பெயரிடப்பட்ட இப்புத்தகம் துபாய் வேல்ட் டிரேட் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துபாய் துணை ஆட்சியாளரும் UAE நிதி அமைச்சருமான ஷைக் ஹம்தான் பின் ராஷித் ஆள் மக்தூம் வெளியிட்டார். 5 மீட்டர் நீளமும் 4.03 மீட்டர் அகலமும் கொண்ட இப்புத்தகம் 431 பக்கமும் 1500 கிலோ எடை கொண்டது. 100 பேர் 16 மாதங்களாக பணியில் ஈடுபட்டு இறகுகளாலும் விஷேசமாக தயாரிக்கப்பட்ட காகிதத்தாலும் இந்நூல் அரபிமொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் அச்சிடப்பட்ட இப்புத்தகத்தை தயாரிக்க 11 மில்லியன் திர்ஹம் செலவாகியுள்ளது. 


                 அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதலையும் உலக அளவில் இஸ்லாத்தின் சிறப்புகளையும் உள்ளடக்கிய இந்நூல், சவூதி அரேபியாவின் எழுத்தாளரும் ரியாதின் காம்பளக்ஸ் பார் இஸ்லாமிக் பிக்ஹு ஆராய்ச்சி செக்ரைட்ரியுமான டாக்டர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் முஸ்லிஹ் எழுதியதாகும்.

 செய்தி: P.A.சையத் முஹம்மது , கோவை.