சுவாமி அசீமனந்தாவின் மனம் மாற்றிய அப்துல் கலீம்:

    *கடந்த 2007-ம் ஆண்டில் 68 பேரின் உயிரைப் பலிகொண்ட சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம், மாலேகன் மற்றும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்தை* - *நடத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அசீமானந்தா பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த ஒப்புதல் வாக்குமூலத்துக்கு மூலகாரணமாக விளங்கியவர்களில் முக்கியமானவர் அப்துல் கலீம் என்ற 21 வயது முஸ்லிம் வாலிபர் என்பதை எத்தனை பேர் அறிவோம்?. * சுவாமி அசீமானந்தா நவம்பர் 2010-ல் மக்கா மஸ்ஜித் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆந்திர மநிலம் ஹைதராபாத்திலுள்ள சஞ்சல்குடா மாவட்ட சிறைச்சலையில் அடைக்கப்பட்ட பொழுது அந்த வியத்தகு சம்பவம் நடந்தது. அவர் அடைக்கப்பட்ட சிறையில்தான் - மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அப்துல் கலீமும் அடைக்கப்பட்டிருந்தார். 
    ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் இருவருக்கும் ஏற்பட்ட பரிச்சயம் நட்பாக மாறியது. அப்துல் கலீம் - வயோதிகரான சுவாமிக்கு தேவையான உணவு- குடிநீர் பொன்றவைகளை பெற்றுத் தந்து உதவி வந்தார். அவ்வாறு உதவி வந்த இளைஞனிடம் *ஏதேச்சையாக ஒருநாள் கலீமின் சிறைத்தண்டனைக்கு காரணம் என்னவென்று சுவாமி ஒருநாள் கேட்டிருக்கிறார்.* *அதற்கு அந்த இளைஞன் அளித்த பதில்தான் - சங்பரிவாரால் மழுங்கடிக்கப்பட்ட 'மனிதநேய' உணர்வை மீண்டும் அந்தச்சுவாமியில் மனதில் கிளர்ந்தெழச் செய்தது.* *அப்துல் கலீம், தான் கடந்த ஒன்றரை அண்டு காலமாக மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டு - கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படிருப்பதாகவும் - மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை - கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் வரை செல்போன் வியாபாரம் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்ததாகவும் - அவர் சிறைக்கு வந்தபிறகு குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகவும் கூறியிருக்கிறார். அதைக்கேட்ட அசீமானந்தா சிந்திக்க தொடங்கினார் - அவரின் மனசாட்சி 'அப்துல் கலீம்' போன்ற இளகிய மனம் படைத்த அப்பாவி இளைஞனின் சிறைத்தண்டனைக்கு காரணமாகிவிட்டோமே என்று உறுத்த ஆரம்பித்துவிட்டது. * 
    *மதக்காழ்ப்புணர்ச்சியோ - வெறுப்புணர்ச்சியோ காட்டாமல் - ஹிந்து சுவாமியான தனக்கு - அப்துல் கலீம் செய்த பணிவிடைகளை எண்ணிப்பார்த்த சுவாமி அசீமனந்தா - மனம் வருந்தினார். தான் செய்த தவறுக்கு 'பிரயசித்தம்' தேடிக்கொள்வது' என்றும் - வெடிகுண்டு சம்பவத்திற்கு காரணமான உண்மைக்குற்றவாளிகள் தண்டனை பெற்றே தீரவேண்டும் என்று முடிவெடுத்தார். மேற்கண்ட சம்பவங்களை கடந்த டிசம்பர் 18 அன்று - டெல்லி மாஜிஸ்ட்டிரேட் முன்னிலை சுவாமி அசீமானந்தா அளித்த 42 பக்க வாக்கு மூலத்தில் கூறியுள்ளாராம்.* *சுவாமி அசீமனந்தாவின் ஒப்புதல் வக்குமூலத்திற்கு மிகமுக்கிய கரணியாக விளங்கிய அப்துல் கலீம் பற்றி - பிரபல புலனாய்வு ஏடானா 'தெஹல்கா' **
     -- தோழமையுடன், (பிறைநதிபுரத்தான்)(http://pirainathi-puram.blogspot.com)