முன்னாள் எஸ்.ஐ.ஓ. மாநில தலைவருக்கு இளம் சாதனையாளர் விருது.

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்.ஐ.ஓ), தமிழக மண்டல முன்னாள் மாநில தலைவர் சகோ.சலீம் M.Sc.,B.ed.,PGDSA., அவர்களுக்கு, கோவை சாந்தி ஆஷ்ரமம் சார்பில் இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கோவையில் சமூக சேவை, இஸ்லாமிய சமூகத்தினரிடையே ஆக்கப்பூர்வமான பணியாற்றியது, இளம் தலைமுறையினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டது ஆகிய பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

கோவை சாந்தி 
ஆஸ்ரமத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, 
கல்வி, கலை, இலக்கியம், அரசியல், சமூக சேவை, சுற்றுச்சூழல் , சுகாதாரம், போன்ற 25 துறைகளில் சிறந்து  விளங்கிய நபர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. சகோ.சலீம் அவர்களுக்கான விருதினை சாந்தி ஆஸ்ரமத்தின் அறங்காவலர்களில் ஒருவரான திரு. ரங்கண்ணா அவர்கள் வழங்கினார். கோவை குமருகுரு கல்லூரியில்  நடைபெற்ற இவ்விழாவில் திரளான மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு , இந்த ஆண்டை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்கும் ஆண்டாக அனுஷ்டிக்க இருப்பதாக சாந்தி ஆஸ்ரமத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதை ஒட்டி
SAY NO VIOLENCE TO WOMEN என்கிற குறும்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது. வெள்ளி விழா காணும், சாந்தி ஆஸ்ரமம் கோவையில் சமூக முன்னேற்ற பணிகளையும், இளம் தலைமுறையினரிடையே சமூக சேவை உணர்வு , மற்றும் மத நல்லிணக்கத்தை உருவாகுவதற்காக பாடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தனக்கு கிடைத்த இவ்விருது குறித்த மகிழ்ச்சி தெரிவித்த சகோ. சலீம் அவர்கள் மேலும் கூறுகையில் ,  இந்த விருது அகில இந்திய எஸ்.ஐ.ஓ. வின் ஒவ்வொரு ஊழியருக்கும் கிடைத்த விருது எனக் குறிப்பிட்டார். ஏனென்றால் எஸ்.ஐ.ஓ. வின் ஒவ்வொரு ஊழியரும்,தேசம் முழுவதும்  இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை இளம் தலைமுறையினரிடையே செய்து வருகின்றனர் எனவும், தான் அடையாளம் காணப்பட்டதால் தனக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருப்பதாகவும், இது போன்ற விருதினை பெற எஸ்.ஐ.ஓ. வின் ஆயிரக்கணக்கான ஊழியர்களில் ஒவ்வொரு  ஊழியரும் தகுதியானவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


சலீம் அவர்கள் கோவை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,  ஆசிரியராக பணிபுரிகிறார்.  மேலும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்கள் நிகழ்வுகளை வழங்கி வருகிறார். சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சலீம் அவர்கள் மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல்கள் வழங்கி இருக்கிறார். 



Br.M.Saleem's mail ID:  microsalim@rediffmail.com,