SDPI போட்டியிட்ட 300 இடங்களில் 56 ல் வெற்றி


சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, தமிழக உள்ளாட்சி தேர்தலில் 300 இடங்களில் போட்டியிட்டது. மாநகராட்சி மேயர் பதவிகளில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவோடு போட்டியிட்டது. சென்னை, ஈரோடு மாநகராட்சியில் SDPI ன் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கோவையில் ஐக்கிய ஜமாத் வேட்பாளருக்கு SDPI ஆதரவளித்தது. இதில் SDPI ஆதரவுடன் போட்டியிட்ட கோவை மேயர் வேட்பாளர் M.அமீர் அல்தாப் 36,471 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
அதேபோல் ஈரோட்டில் போட்டியிட்ட SDPIன் மேயர் வேட்பாளர் யூனுஸ் 4952 வாக்குகள் பெற்றுள்ளார். சென்னை மேயர் வேட்பாளர் அமீர் ஹம்சா 16,170 வாக்குகள் பெற்றுள்ளார்.
மாநகராட்சி மன்ற உறுப்பினர்களில் கோவையில் 82 வது வார்டில் போட்யிட்ட SDPI ன் வேட்பாளர் முகம்மது சலீம் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் நெல்லை மாநகராட்சியில் 36 வது வார்டு SDPI வேட்பாளர் மைதீன் பாத்திமா வெற்றி பெற்றுள்ளார்.
இது தவிர நகராட்சியில் 2 உறுப்பினர்கள், பேரூராட்சியில் 8 உறுப்பினர்கள், ஊராட்சியில் 33 உறுப்பினர்கள்SDPI சார்பாக போட்யிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
அதேபோல் 11 ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் SDPI வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். SDPI போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் ஆதரவு அளித்து வாக்களித்த பொது மக்களுக்கு SDPI ன் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

K.K.S.M.தெஹ்லான் பாகவி
SDPI மாநில தலைவர்
தமிழ்நாடு