ஊழலின் ஊற்றை அடைக்க...உரத்த சிந்தனை

டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத், 
துணைத் தலைவர், இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்ததைக் குறித்து, பலரும் பல கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். "உண்ணாவிரதம் இருந்தால் ஊழல் ஒழிந்துவிடுமா... சட்டங்களால் ஊழலை ஒழித்துவிட முடியுமா...' 

தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி: எச்சரிக்கை

இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி. 

பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து
காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...

முன்னாள் எஸ்.ஐ.ஓ. மாநில தலைவருக்கு இளம் சாதனையாளர் விருது.

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்.ஐ.ஓ), தமிழக மண்டல முன்னாள் மாநில தலைவர் சகோ.சலீம் M.Sc.,B.ed.,PGDSA., அவர்களுக்கு, கோவை சாந்தி ஆஷ்ரமம் சார்பில் இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கோவையில் சமூக சேவை, இஸ்லாமிய சமூகத்தினரிடையே ஆக்கப்பூர்வமான பணியாற்றியது, இளம் தலைமுறையினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டது ஆகிய பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

கோவை சாந்தி 
ஆஸ்ரமத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, 
கல்வி, கலை, இலக்கியம், அரசியல், சமூக சேவை, சுற்றுச்சூழல் , சுகாதாரம், போன்ற 25 துறைகளில் சிறந்து  விளங்கிய நபர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. சகோ.சலீம் அவர்களுக்கான விருதினை சாந்தி ஆஸ்ரமத்தின் அறங்காவலர்களில் ஒருவரான திரு. ரங்கண்ணா அவர்கள் வழங்கினார். கோவை குமருகுரு கல்லூரியில்  நடைபெற்ற இவ்விழாவில் திரளான மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

ரமழானும் நடைமுறை வாழ்வும் - நேர்காணல்


தலைசிறந்த இஸ்லாமிய அறிஞரும் எழுத்தாளரும் நாவன்மை மிக்க பேச்சாளருமாகிய ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் 'ரமழானும் நடைமுறை வாழ்வும்' என்ற தலைப்பில் அல்ஹஸனாத்துக்கு வழங்கிய நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

நோன்பு' சட்டம் -சலுகை -பரிகாரம்

  வசந்தம் என்றாலே மனம் இனிக்கும். ஏனெனில் அது பூமி பூக்கும் காலம். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வசந்தக் காலம் உண்டு. ஒட்டு மொத்த பூமிக்கும் சேர்த்து ஒரு வசந்தம் உண்டா...
 ஆம் உண்டு. ஆசியாவும், ஆப்ரிக்காவும், அமேரிக்காவும், ஐரோப்பாவும், உலகின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்று சேர்ந்து எதிர்பார்கும் வசந்தம்.

உங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்கள் யார்?

உங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்கள் யார்?   உண்மையான  நண்பர்களுக்கு   பதிலாக கற்பனை கதாபாத்திரங்களே    நண்பர்களாக  உள்ளார்களா?  அந்தக கற்பனைப் பாத்திரங்களுடன் அவர்கள் இலயித்துக் கிடக்கிறார்களா? அப்படியானால், நீங்கள் அவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கிறீர்கள்  என்று அர்த்தம்.

காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும்


மும்பை : வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.