முன்னாள் எஸ்.ஐ.ஓ. மாநில தலைவருக்கு இளம் சாதனையாளர் விருது.
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்.ஐ.ஓ), தமிழக மண்டல முன்னாள் மாநில தலைவர் சகோ.சலீம் M.Sc.,B.ed.,PGDSA., அவர்களுக்கு, கோவை சாந்தி ஆஷ்ரமம் சார்பில் இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கோவையில் சமூக சேவை, இஸ்லாமிய சமூகத்தினரிடையே ஆக்கப்பூர்வமான பணியாற்றியது, இளம் தலைமுறையினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டது ஆகிய பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
கோவை சாந்தி ஆஸ்ரமத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, கல்வி, கலை, இலக்கியம், அரசியல், சமூக சேவை, சுற்றுச்சூழல் , சுகாதாரம், போன்ற 25 துறைகளில் சிறந்து விளங்கிய நபர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. சகோ.சலீம் அவர்களுக்கான விருதினை சாந்தி ஆஸ்ரமத்தின் அறங்காவலர்களில் ஒருவரான திரு. ரங்கண்ணா அவர்கள் வழங்கினார். கோவை குமருகுரு கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் திரளான மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

Posted by
islamvision
Subscribe to:
Posts (Atom)